| | ஈசனது இயல்பு பேசுதல் தவிர்க காழி மாநகர்க் கவுணியர் கடவுள் ஞான மாகிய நற்பதி கங்கள் எழுதுறு மன்பர்தம் இன்புறு மொழியால் | | 25 | களிறென அணைந்த கல்மனப் புத்தன் முருட்டுச் சிரம்ஒன்று உருட்டினர் அன்றி வாய்ந்த வாளொன்று ஏந்தினர் இலரே என்றதும் ஈர்வாள் கொன்றதென் பதுபோல் தனித்துணை அருளால் துணித்தனர் என்பர் | கிள்ளிப்போட்ட தொழிந்து ஒரு வாள்கொண்டு அறுத்துப்போட்ட தில்லையே. ஆகையால் ஆன்மாவுக்கு அறிவுண்டாகாது; ஈசனது இயல்பு பேசுதல் தவிர்க - நான் ஆன்மாக்களுக்குச் சொல்ல நீர் கர்த்தாவைக் கொண்டுவந்து சொல்லலாமோ அதை விடும், ஆன்மாக்களிலே யுண்டாகிற் சொல்லும்; காழிமா நகர்க் கவுணியர் கடவுள் ஞானமாகியநற்பதிகங்கள் எழுதுறும் அன்பர்தம் இன்புறுமொழியாற்களிறென அணைந்த கல்மனப்புத்தன் முருட்டுச் சிரமொன்று உருட்டினரன்றி வாய்ந்த வாளொன்று ஏந்தினர் இலரே - சீகாழி யென்கிறபெரிய நகரிடத்துண்டாகிய கவுணிய கோத்திரத்துள்ளவர் களெல்லார்க்குந்தலைவராயுள்ள நல்ல சம்பந்தராலே அருளிச்செய்யப்பட்ட ஞானமாயிருக்கிற நல்ல திருப்பதிகங்ளைக் கைத்திருவெழுத்துச் சாத்துகிறதே விரதமாகக்கொண்டுள்ள மிகவும் பத்திமானாயிருக்கிற சம்பந்தசரணால யருடைய இனிய வாக்கினாலே மதத்த யானையைப் போல வாது செய்ய வேண்டுமென்று எதிர்த்துவந்த புத்தனுடைய மொட்டைத்தலை உருண்டு விழத்தக்கதாகச்செய்தது வாக்குக்கொண்டல்லது கூர்மைபொருந்தி யிருக்கிற தொரு வாளையெடுத்துக்கொண்டல்லவே. ஆகையாலே ஆன்மாக்களுங் கண்டதோர் பொறியாற் கொண்டிட வல்லர்களென்று சொல்லும்; என்றதும் ஈர்வாள் கொன்றதென்பதுபோல் தனித்துணையருளால் துணித்தனர் என்பர் என்று இப்படி இவர் செய்தாரென்று சொல்லப்பட்டதும் இந்த ஈர்வாள் எத்தனைபேரைக் கொன்றதென்றால் வாள்கொன்றதாகாமல் அந்த வாளைக் கொண்டு ஒருத்தன் கொன்றதனாற்போல ஒப்பில்லாத கர்த்தாவினுடைய அனுக்கிரகத்தினாலே புத்தனுடைய தலையைத் |