| 15 | கண்டதோர் பொறியாற் கொண்டிட வேண்டும் உதவிய தொன்றாற் கதுமென இயற்றினர் உண்டோ என்னிற் கண்டது மேல்நாள் கடவுளிற் கடிமலர் முடுகிய மதனன் | | 20 | அங்கம் அனங்கம் தங்கிடக் கிடந்தது வையின் திரளிற் செய்ய சிறுபொறி மாட்டி மூட்டிய தன்றே மீட்டுந் தேனமர் தவிசில் நான்முகன் உச்சி அறுத்ததும் கருவி பொறுத்தோ அன்றே | இந்திரியங்களை ஏவிக்கொள்ளுகையினாலே ஆன்மா அறிவோடுங்கூடியிருக்கு மென்று நீ சொல்லில்; கண்டதோர் பொறியாற் கொண்டிட வேண்டும் - ஆன்மா அறிவேயாகில் அந்த அவதரத்துக்குக் கிட்டினதொரு இந்திரியத்தைக் கொண்டு தனக்கு வேண்டின விஷயத்தைப்பொசிக்கவேண்டும்; அது இல்லாத படியாலே ஆன்மா அறிவன்று; உதவியதொன்றாற்கதுமென இயற்றினர் உண்டோ என்னில் - சோத்திரத்தைக்கொண்டு சத்தத்தைக்கொள்ளுவ தொழிந்து யாதொன்றுங் கிட்டின இந்திரியங்களைக் கொண்டு சடக்கென ஒரு தொழிலைச் செய்தவர்களும் இந்தப் பூமியிலே உண்டோவென்னில்; கண்டது - அப்படிக் கண்டது உண்டு. அது எங்கே காணப்பட்டதென்னில்; மேல்நாள் கடவுளிற் கடிமலர்முடுகிய மதனன் அங்கம் அனங்கம் தங்கிடக் கிடந்தது வையின் திரளிற் செய்ய சிறுபொறி மாட்டிமூட்டியதன்றே-முற்காலத்திலே கர்த்தா யோகத்திலே எழுந்தருளியிருக்க அவனிடத்திலே மன்மதனானவன் அந்தயோகத்தைக் குலைக்கவேண்டித் தன்னுடைய மணம்பொருந்தின புஷ்ப பாணங்களைக் கொண்டு கிட்டினபொழுது அவனுடைய சரீரமானது அசரீரம் பொருந்தத் தக்கதாகச் சாம்பலாய்ப் போய்விட்டது, கண் கொண்டு செய்த தொழிந்து அவன்மேலே வைக்கோற்றிரையைக் கொண்டு வந்து குவித்துச் சிவந்திருக்கிற சிறிய நெருப்புப் பொறியை நயந்த வைக்கோலிலே மாட்டி ஊதி யெரித்த தல்லவே; மீட்டும் -இதன்றியும்; தேனமர் தவிசில் நான்முகன் உச்சி அறுத்ததுங் கருவிபொறுத்தோஅன்றே - வண்டுகள் பொருந்தபட்டி ருக்கிற தாமரைத் தவிசிலேயிருக்கிற பிரம்மாவினுடைய நடுவிற்சிரசைக் கையில் நகங்கொண்டு |