| 5 | மற்றவை பற்றி உற்றறிந் திடுதலின் அறிவென வழங்கும் உயிர்என உரைத்தல் காணுங் கண்ணினன் கைதொடு தடவிப் | 10 | பூணும் பொருளின் பெயர்பல புகறல் என்னுங் கிளவி தன்னொடு தகுமே அவ்வவ புலன்கட் கவ்வவ பொறிகளைச் செவ்விதின் நிறுவலின் அறிவெனச் செப்பினை அறிவி லாமைகண் டனம்அணை புலற்குப் பொறிகள் ஏவலின் அறிவொடு பொருந்தில் | கருத்து. அப்படியன்று; மற்று அவைபற்றி உற்றறிந்திடுதலின் அறிவென வழங்கும் உயிர் என உரைத்தல்-அந்த இந்திரியங்களை ஆன்மா பொருந்தி ஒருவிஷயங்களை உற்றறிந்து வருகையினாலேஇந்த ஆன்மாவை அறிவென்று சொல்லப்படுமென்று நீ சொல்லுகிறது; காணுங்கண்ணினன் கைகொடு தடவிப் பூணும் பொருளின் பெயர்பலபுகறல் என்னுங் கிளவி தன்னொடு தகுமே - கண்ணிரண்டுங் கொண்டு காண்பா னொருத்தன் கண்ணைக்கொண்டு பார்த்துப் பதார்த்தங்களைச் சொல்லாமற் கைகளைக்கொண்டு தடவிக் கைகளிலே தட்டின பண்டங்களினுடைய பல பெயர்களையுஞ் சொன்னான் என்கிறசொல்லோடொக்கும், ஆன்மா அறிவா யிருக்கச் செய்தே தான் விஷயங்களைக் கொள்ளமாட்டமல் இந்திரியங்களைக் கொண்டு விஷயங்களைக் கொண்டதென்று நீ சொல்லுகிற இது. இதன்றியும்; அவ்வவ புலன்கட்கு அவ்வவ பொறிகளைச்செவ்விதின் நிறுவலின் அறிவெனச் செப்பினை - ஆன்மாவுக்குக் கொள்ளவேண்டின அந்தந்த விஷயங்களுக் கேற்ற அந்தந்த இந்திரியங்களை மாறுபாடறச் செவ்வையிலே நிறுத்திக் கொள்ளுகையிலே ஆன்மாவை அறிவென்று உன்னுடைய மதத்திலே நீ சொன்னாய்; அறிவிலாமை கண்டனம்-இதுகொண்டே ஆன்மாவுக்கு அறிவில்லையென்றது கண்டோம். அது ஏனென்னில், தான் அறிவாயிருக்கச் செய்தே தனக்குக் கொள்ளவேண்டின விஷயத்துக்குப் பொறிகளை ஏவுதலினாலே; அணைபுலற்குப் பொறிகள் ஏவலின் அறிவொடு பொருந்தில்- மற்றுஞ் சடமாயுள்ளதொன்று இந்திரயங்களைக் கொண்டு ஒரு விஷயங்களை அறியப்பெற்றோ மில்லையே; ஆகையால், தன்னொடு பொருந்தவேண்டின விஷயங்களுக்கேற்ற |