| 60 | சலம்இல னாகிச் சார்ந்தவர்க் கென்றும் நலம்மிக நல்கும் நாதனை அணைந்து பூழி வெம்மை பொருந்தா துயர்ந்த நீழல் வாழும் நினைவினர் போலத் திருவடி நீழல் சேர்ந்து கருவுறு துயரங் களைந்திருந் திடுமே. 15 | 16. ஈசுவர அவிகாரவாதி நிராகரணம் இருந்ததுன் கேள்வி திருந்திடும் உயிர்கள் அறிவின வாயிற் பொறிபுலன் என்னை | கூடிக் கொண்டிருக்கிற கர்த்தாவை; சலம் இலனாகிச் சார்ந்தவர்க்கு என்றும் நலம் மிகநல்கும் நாதனை அணைந்து-அப்படிப் பக்ஷப் பிரதிபக்ஷமில்லாம லிருக்கசெய்தேயுந் தன்னை வந்து பொருந்தின பக்குவப்பட்ட ஆன்மாக்கள் பொல்லாங்கைச் செய்தார்களாயினும் அது தனது திருவுளத்திற்காணாமல் அவர்களுக்கு வேண்டின நன்மைப் பகுதிகளை மிகவுங் கொடுக்குஞ் சுவாமியாயுள்ளவனைச் சென்றுகூடி; பூழிவெம்மை பொருந்தாது உயர்ந்த நீழல் வாழும் நினைவினர்போல - மத்தியானகாலத்திலே வழி நடந்தவர்களுக்கு அந்த வழியிலுண்டாகிய பொடிச்சூடு நீக்கத்தக்கதாக உயர்ந்த மரத்தின் நிழலிலே வந்து பிரியப்பட்டிருக்கிற நினைவினையுடையவர்களைப்போல; திருவடிநீழல் சேர்ந்து கருவுறு துயரம் களைந்திருந்திடுமே இந்த ஆன்மா கர்த்தாவினுடைய திருவடிநீழலைப் பொருந்தித் தனக்கு உண்டாகிய செனன துக்கங்களையெல்லாம் நீக்கிக்கொண்டிருக்கும். மேற் பரிணாமவாதி மறுக்கிறான்: (உரை) இருந்தது உன்கேள்வி - இப்படி யிருந்தது நீ கேட்ட கேள்வி. நான் சொன்னதற்குக் குற்றமென்னை; திருந்திடும் உயிர்கள் அறிவினவாயின் பொறிபுலன் என்னை - ஆன்மாவென்று ஒரு முதல் காணப்படாம லிருக்கச் செய்தே நீ உண்டென்று சொல்லப்பட்ட உயிர்கள் அறிவினோடுங் கூடியிருந்ததாமாயிற் சத்தாதி விஷயங்களைக் கொள்ளுகைக்கு இந்திரியங்கள் வேண்டுவதில்லை. இந்திரியங்களைக்கொண்டு அறிகையினாலே ஆன்மாவுக்கு அறிவில்லையென்பது |