பக்கம் எண் :

11. சிவசமவாதி சங்கற்பம்1241


50 கண்ணா லோசையுங் கரணமுங் கருத
ஒண்ணா தென்னும் உணர்வுடை மையினால்
அவ்வவ புலன்கட் கவ்வவ பொறிகள்
செவ்விதின் நிறுவிச் சேர்ந்தவை நுகரும்
மூல மலத்தின் பாகம்வந் துதவுழி
55 இருள் தரும் இற்புக் கொருபொருள் கவரத்
தீபம் வேண்டு மானவா போல
மோக மாமலம் போக ஞான
விளக்கரன் அருளால் துளக்கறப் பெற்று
நீர்நிழ லனைய சீர்பெறு கடவுளைச்

கூடியிருக்கிற சரீரத்துக்குள்ளே நிற்கிற ஆன்மாக்களும் அறிவேயாயிருக்கும்;
கண்ணால் ஓசையும் கரணமும் கருதவொண்ணாது என்னும் உணர்வுடை
மையினால்-கண்ணைக் கொண்டு ரூபத்தைக் காணும தொழிந்து சத்தத்தையும்
பரிசத்தையும் கெந்தத்தையும் இரதத்தையும் அறிய வொண்ணாதென்கிற
அறிவு இந்த ஆன்மாவுக்கு உள்ளதாயிருக்கையினாலே; அவ்வவ பலன்கட்கு
அவ்வவ பொறிகள் செவ்விதின் நிறுவிச் சேர்ந்தவை நுகரும்-இந்த ஆன்மா
தனக்குக் கொள்ளவேண்டின அந்தந்த விஷயங்களுக்கேற்ப அந்தந்த
இந்திரியங்களை மாறுபாடற நிறுத்தி அவையிற்றிலே பொருந்தப்பட்டு
வருகிற விஷயங்களைப் பொசியாநிற்கும். இது பெத்தம்.

     மேல் முத்தி : மூலமலத்தின் பாகம் வந்து உதவுழி - இப்படிக்
கன்மத்தைப் பொசித்துகொண்டு வருகிற அதனாலே ஆணவமலத்தினுக்குப்
பாகம் வந்து உண்டானவிடத்து; இருள்தரும் இல்புக்கு ஒரு பொருள் கவரத்
தீபம் வேண்டுமானவா போல-இருண்டுகொண்டிருக்கிற வீட்டுக்குள்ளே
சென்று ஒரு பதார்த்தத்தை எடுக்க வேண்டின விடத்து ஒரு விளக்கை
முன்னிட்டுக்கொண்டு சென்று அந்தப்பதார்த்தத்தை யெடுத்த தன்மைபோல;
மோகமாமலம் போக ஞானவிளக்கு அரனருளால் துளக்கறப்பெற்று - இந்த
ஆன்மா தனக்கு உண்டாகிய அஞ்ஞான இருளாகிய ஆணவமலம்
நீங்கத்தக்கதாகஞானமாகிய தீபத்தைச் சிவனுடைய அனுக்கிரகத்தினாலே
அசைவறப்பெற்று; நீர் நிழல் அனைய சீர்பெறு கடவுளை-தண்ணீரைப்
போலவும் நிழலைப்போலவும் ஒருவரளவினும்பக்ஷப் பிரதிபக்ஷமின்றி மிக்க
சிறப்பினோடுங்