பக்கம் எண் :

1240சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

45 ஏகம் உயிர்அறி வாக மொழிந்தனை
இருபொருள் ஒருமை மருவிய திலதே
இவ்வகை கிடக்க மெய்வகை கேண்மதி.     14

15. ஈசுவர அவிகாரவாதி சங்கற்பம்

பஃறுளைக் கடத்தி னுள்விளக் கேய்ப்ப
அறிவுள தாகும் உருவுறும் உயிர்கள்

புரிந் தார்க்கருள் செய்யும், ஐயைஞ்சி னப்புறத் தானும் ஆரூ ரமர்ந்தவம்
மானே' என்று முற்காலத்திலே திருவருளைப் பெற்ற பெரியோர்கள் அருளிச்
செய்தார்களென்று நான் சொல்லவும், இந்த இந்திரியங்களை விட்டால்
இவனுடைய அறிவு சீவியாதாகையால் அந்த இந்திரியங்களை யின்றித்
திருவருளை யறியும் பகுதி எப்படி யென்று கேட்கிற உனக்குச் சொல்லுகிறது
ஒருவனும் ஒருத்தியுங் கூடி அனுபவித்த இன்பத்தைத் தான் அனுபவிக்க
மாட்டா அலியாயுள்ளவனுக்குச் சொல்லுகிறதை யொக்கும்; மருட்பேறினை
யன்றே - மாயைக்குள்ளே மயங்கப்பட்டு வருகிற பொருள்களை அறிகிறது
தானே பேறாகக் கொண்டாயாகையால் இது அர்த்தமன்று. இதன்றியும்;
ஏகம்உயிர் அறிவாக மொழிந்தனை - அருளும் ஆன்மாவுங் கூடின விடத்து
இரண்டும் ஒன்றாய் விடுமென்று நீ சொன்னாய்; இரு பொருள் ஒருமை
மருவிய திலதே - இந்தப் பிரபஞ்சத்திலே ஒரு முதல் கெட்டு ஒரு
முதலாகுதல் அல்லது இரண்டு முதலாகுதலொழிந்து இரண்டு முதல் கூடி
ஒரு முதலாய் நிற்குமென்பது உண்டாகாது. ஆகையால் அருளும் ஆன்மாவுங்
கூடி ஒன்றாய்நிற்குமென்பது அர்த்தமாகாது; இவ்வகை கிடக்க மெய்வகை
கேள்மதி - இங்ஙனம் நீ பலவகையாகச் சொன்ன அர்த்தங்களைப் போட்டு
நான் சொல்லப் போகிற சத்தியத்தைப் புத்திபண்ணிக் கேட்பாயாக. மதி
யென்றது அசை.                                             14

     மேல் ஈசுவர அவிகாரவாதி தன் மதம் கூறுகின்றான்:

     பல் துளைக் கடத்தினுள் விளக்கு ஏய்ப்ப அறிவுளதாகும் உருவுறும்
உயிர்கள் - பல துவாரத்தோடுங் கூடியிருக்கிற குடத்துக்குள்ளே ஏற்றிவைத்த
விளக்கினைப் போல நவத்துவாரங்களோடுங்