35 | அருளுரு மாயா இருளின தாங்கொல் சத்தப் பரிச ரூபரச 1கெந்தமென்று எத்திறத் தினதருள் இயம்புக அன்றியும் நிறைந்து நீயாய் நின்றனை யேனும் மறைந்தைம் புலனால் வாரா யென்றும் கரணம் எல்லாங் கடந்தனை என்றும் | | 40 | மரணம்ஐ யைந்தின் அப்புறத் தென்றும் முன்னருட் டலைவர் பன்னினர் எனவும் இனையவை ஒழிய அறிகுவ தெவ்வாறு என்ற நிற்கலிக் கொன்றிய இன்பம் கூறுதல் தகும்மருட் பேறினை அன்றே | மாயா இருளினதாம் கொல்-திருவருளும் மாயையிலே தோன்றப் பட்டிருக்கிற இருட் சொரூபங்களிலே ஒன்றாக வேண்டும்; சத்தப் பரிச ரூப ரச கெந்த மென்று எத்திறத்தினது அருள் இயம்புக - சத்தப் பரிச ரூப ரச கந்தங்க ளோடுங் கூடி இவையிற்றை அறிந்து வருகிறது மாயா கருவிகள், இந்த விஷயங்களுக்கும் மனம் வாக்குக்கும் எட்டாத திருவருள் எத்தனை தூரம். இதற்கு உத்தர முண்டானாற் சொல்லுவாயாக; அன்றியும் நிறைந்து நீயாய் நின்றனையேனும் மறைந்து ஐம்புலனால் வாராயென்றும் கரணமெல்லாம் கடந்தனை யென்றும் மரணம் ஐயைந்தின் அப்புறத்தென்றும் முன்னருட் டலைவர் பன்னினர்எனவும் இனையவையொழியஅறிகுவது எவ்வாறு என்ற நிற்கு அலிக்கு ஒன்றிய இன்பங்கூறுதல் தகும் - இதன்றியும்[கைலை பாதி காளத்திபாதி] அந்தாதி[48] 'நிறைந்தெங்கு நீயேயாய் நின்றாலு மொன்றி, மறைந்தைம் புலன்காண வாராய் - சிறந்த, கணியாருந் தண்சோலைக் காளத்தி யாள்வாய், பணியாய லென்னும் பரிசு என்றும், திருவாசகம் [திருக்கோத்தும்பி, 9] 'கரணங்க ளெல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன், சரணங்க ளேசென்று சார்தலுமே தானெனக்கு, மரணம் பிறப்பென் றிவை யிரண்டின் மயக்கறுத்த, கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ ' என்றும், [அப்பர்] திருப்பாட்டு [4. 4. 10] 'பையஞ் சுடர்விடு நாகப் பள்ளிகொள்வானுளத்தானும், கையைஞ்சு நான்குடை யானைக் கால்விர லாலடர்த் தானும், பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்
1. நறை யென்று - பாடபேதம். |