| 15 | காட்டத் தங்கி கூட்டக் கூடும் இந்தனத் தியற்கை வெந்தழல் தாங்கா உப்பளத் தடுத்த புற்பலா லங்கள் சடத்த வேனுங் கொடுத்தது கொள்ளுந் தன்மைஉண் டுனக்கு இன்மைய தன்றே | | 20 | அவமுறு கருவி சிவமய மாம்எனக் கூறினை தாகம் வேறுருக் கவராது என்பதென் அவைமுற் றுன்பந் துடைக்குந் திருவருள் மருவ உரியன என்னில் | பார்த்தவர்கள் முகத்திலுண்டாகிய ஒளியைத் தள்ளிவிடாமல் கண்ணாடிதானே யென்னத்தக்கதாகத் தன்னிடத்திலே கவளிகரித்துகொண்டு நிற்கிற கண்ணாடி யினது தன்மைபோலக் கொடுத்தது கொள்ளுந் தன்மை உனக்கு அடுக்கும தொன்றன்று - இதன்றியும்; காட்டத்து அங்கி கூட்டக்கூடும் இந்தனத்து இயற்கை வெந்தழல்தாங்கா-விறகினிடத்து உண்டாகிய நெருப்பை ஆன்மா வோடுங் கூடிநிற்கிற அருளுக்கு உவமை சொன்னாய். நெருப்புவிறகைச் சுட்டுப் போடுகையினால் அது அர்த்தமன்று. இதன்றியும்; உப்பளத்து அடுத்த புற்பலாலங்கள் சடத்தவேனுங் கொடுத்தது கொள்ளுந் தன்மையுண்டு உனக்கு இன்மையதன்றே - அளத்திலே கூடின புல்லும் வைக்கோலுஞ் சடமாயிருந்ததாயினும் அவையிற்றுக் கொடுத்தது கொள்ளுந் தன்மையுண்டு; உனக்கு கொடுத்து கொள்ளுந் தன்மையுண்டாகாது. இதன்றியும்; அவமுறு கருவி சிவமயமாம் எனக் கூறினை - அசுத்த மாயையிலேநின்றுந் தோன்றப் பட்டுப் பொல்லாங்குகளுக்கு ஏதுவாயிருக்கிற இந்தக் கருவிகளைச் சிவ சொரூபமாமென்று உன் மதத்திலே சொன்னாய்; தாகம் வேறு உருக் கவராது - அது இந்தச் சரீரத்தோடு உண்டாகிய ஆசை நீ சொன்னாய். அதொழிந்து அந்தச் சிவசொரூபஞ் சுத்த நின்மலமாயும் இந்த மாயா ரூபம் மலமாயு மிருக்கையால் இது அதுவாகாது; என்பதென் அவைமுன் துன்பந்துடைக்குந் திருவருள் மருவ உரியன என்னில்-என்று நீர் சொன்னதென்னை, அந்த மாயாகருவிகள் அனாதியே தொன்றுதொட்டு வருகிற செனன துக்கத்தை நீக்கிவிடுகிற திருவருளைப் பொருந்தி அருட் சொரூபமாகைக்கு உரியன காணுமென்று நீ சொல்லில்; அருளுரு |