பக்கம் எண் :

11. சிவசமவாதி சங்கற்பம்1237


ஒன்றின் பயன்நனி ஒன்றறி யாதால்
இதுவே யல்லது கதுமென இருசெவி
இருகூற் றொருகால் தெரியாத் தன்மைவந்து
20 எய்தும் மனாதியும் மெய்யிற் செயலுந்
தனக்கிலை யொருவற் கெனத்தெளி கிலையே
நோக்கும் முகவொளி நீக்காத் தானெனக்
கவருந் தன்மை முகுரம் போலக்
கொடுத்தது கோடற் கடுத்ததுண் டன்றே

காய்களைத் தோற்றுவித்தும் ஒரு காலத்திலே பழங்களைத் தோற்றுவித்தும்
நின்ற தன்மைபோல இந்திரியங்கள் ஐந்தும் ஓரொரு விஷயங்களாகக் காரியப்
பட்டு வருமென்று நீ சொல்லின்; ஒன்றின் பயன் நனிஒன்று அறியாதுஆல்
இதுவேயல்லது கதுமென இருசெவி இருகூற்று ஒருகால் தெரியாத் தன்மை
வந்து எய்தும் ஒரு கொம்பிலே ஒரு காலத்திலே இலையும் ஒரு காலத்திலே
பூவும் உண்டானாற்போல ஓர் இந்திரியத்துள்ள விஷயத்தை மற்றோர்
இந்திரியம் அறியக்கண்டோமில்லை. இந்தத் தோஷமுமன்றி நீ ஒன்றொன்றாக
அறியும் என்றதற்கு இன்னமும் ஒரு தோஷம் உண்டு. அது ஏதென்னில், ஓர்
இந்திரியமாயிருக்கிற இரண்டு செவியினுஞ் சடக்கென இரண்டுசத்தம் ஒரு
காலத்திலேசொல்ல ஒருவன் சொன்னதை யறிந்தும் ஒருவன் சொன்னதை
யறியாமலுமா யிருக்கையாலும்; மனாதியும் மெய்யிற் செயலுந் தனக்கு இலை
ஒருவற்குஎனத் தெளிகிலையே - அந்த இந்திரியங்களினுடைய தொழில்
தனக்கின்றி ஆன்மாவுக்கானாற்போல அந்தக்கரணங்களுக்கு உண்டாகிய
தொழிலும் சரீரத்துக்கு உண்டாகிய தொழிலும் இவையிற்றுக்கின்றி
ஆன்மாவுக்கு உள்ளதென்று தெளிவாயாக. எனவே, ஆன்மா அவிகாரியல்ல
விகாரியென்பது கருத்து. இது பெத்தத்தை மறுத்தது.

     மேல் முத்தியை மறுக்கிறான் : இதன்றி நீ முத்தித் தன்மை சொல்லுகிற
இடத்திலே கண்ணாடியிலே பார்த்தவர்களுடைய முகத்தில் ஒளி அந்தக்
கண்ணாடியிலே தோன்றினாற்போலக் கர்த்தாவினுடைய திருவருளும் இந்த
ஆன்மாவிலே பிரகாசிக்குமென்று நீ சொன்னாய்; நோக்கும் முக ஒளி
நீக்காத் தானெனக் கவருந் தன்மை முகுரம்போலக் கொடுத்தது கோடற்கு
அடுத்தது உண்டன்றே -