பக்கம் எண் :

1236சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

10 நடத்த ஆவியும் சடத்தன ஆயின்
பூட்டையிற் பூணி கூட்டல் பெறாதே
புலன்ஐம் பொறியில் நிலவிடும் என்றனை
அஞ்சும் ஒருகால் துஞ்சா தறிதற்கு
அழிவென் னற்றருச் செழுமலர் இலைபலம்
15 கனிதரு வதுபோல் இனையவை ஐந்தும்
ஒன்றொன் றாக நின்றறி வுறுமெனில்

உடலைக் காரியப்படுத்துமதொழிந்து பிராணவாயுக் காரியப்படுத்த மாட்டாது.
ஆன்மா அவிகாரியாயிருப்ப தொழிந்து இவையிற்றைக் காரியப்படுத்தா
தென்று நீ சொல்லில்; மனாதி எய்து உயிர் பொறிபுலன் நடத்த ஆவியும்
சடத்தன ஆயின் - மனம் புத்தி யாங்கார சித்தமென்கிற அந்தக்கரணங்கள்,
பொருந்தப்பட்ட பிராணவாயு, சோத்திரம் தொக்கு சட்சு சிங்ஙுவை
ஆக்கிராண மென்கிற இந்திரியங்கள் சத்தப் பரிச ரூப ரச கந்தங்கள் என்கிற
விஷயங்கள் இவையெல்லாவற்றையுங் காரியப்படுத்திக்கொள்ளுதற்கு ஆன்மா
சடமாயிருக்கு மாயின்; பூட்டையிற் பூணி கூட்டல் பெறாதே-பூட்டையினிடத்து
உண்டாகிய பூணியினாலே மற்றுண்டான உறுப்புகளெல்லாங் காரியப்பட்டு
வருகையினாலே நீ பூணியை ஆன்மாவுக்கு உவமைசொன்னது திட்டாந்த
விரோதம். ஆகையால் இது அர்த்தமாகாது. பூணியைப் போல ஆன்மா,
தவிலைப்போல அந்தக்கரணம், கதிரினைப்போல பிராணவாயு, சந்திர
வளையத்தைப்போல இந்திரியங்கள், சலத்தைப் போல இந்திரிய விடயங்கள்,
பட்டையைப்போலச் சரீரமாகையால் எனக்கொள்க. இதன்றியும்; புலன்
ஐம்பொறியில் நிலவிடும் என்றனை சாத்தாதி விஷயங்கள் ஐந்தும்
இந்திரியங்கள் ஐந்தினும் வந்து பொருந்துமென்று நீ சொன்னாய்; அஞ்சும்
ஒருகால் துஞ்சாது அறிதற்கு அழிவு என் - ஐந்து விஷயங்களையும் ஐந்து
இந்திரியங்களுங் கொள்ளுமாயின் ஐந்தும் ஏககாலத்திலே அறியவேண்டும்,
விஷயங்கள் ஐந்தில் ஒன்று சீவித்து மற்றை நாலுஞ் சீவியாமலிருக்கைக்குக்
குறைவென்; நற்றருச் செழுமலர் இலைபலங் கனிதருவதுபோல் இனையவை
ஐந்தும் ஒன்றொன்றாகநின்று அறிவுறும் எனில் - நல்லதொரு மரமானது
ஒருகாலத்தில் இலைகளைத் தோற்றுவித்தும் ஒரு காலத்திலே கொழுவிய
மலர்களைத் தோற்றுவித்தும் ஒருகாலத்திலே