பக்கம் எண் :

11. சிவசமவாதி சங்கற்பம்1235


14. சங்கிராந்தவாதி நிராகரணம்

இன்றுன துரையின் நன்றி உயிர்ஒளித்
தீபம் போலத் தாபந் தரில்இருள்
செறியுந் தன்மைஎன் அறிவில தாகில்
ஒளியென உரைத்த தெளிவதற் கேதாம்
5 சன்னதி யளவில் மன்னுஞ் செயல்உடல்
காந்தம் போல வாய்ந்த தென்ற
தன்மையும் உணராப் புன்மையை யன்றே
உயிருடல் இயக்கில் துயில்பெறுங் காலைச்
செய்ததென் மனாதி எய்துயிர் பொறிபுலன்

     மேல் ஈசுவர அவிகாரவதி மறுக்கிறான்;

     (உரை) இன்று உனது உரையின் நன்றி - இப்பொழுது நீ பலவாகச்
சொல்லி வந்த பெத்த முத்தியினது நன்மையை விசாரித்துப் பார்க்குமிடத்து;
உயிர் ஒளித் தீபம்போலத் தாபம் தரில் - ஆன்மாவானது ஒளிபொருந்தி
யிருக்கிற விளக்குப்போலத் தாவுதலைச் செய்யுமாயின்; இருள் செறியுந்
தன்மை என் - இப்படிப் பிரகாசித்து நிற்கிற ஆன்மாவுக்கு அஞ்ஞானமாகிய
இருள் பொருந்தின தன்மை என்னதான்; அறிவிலதாகில் - இந்த
ஆன்மாவுக்கு அறிவில்லாதது கொண்டு இருள் பொருந்தினதாகில்; ஒளியென
உரைத்த தெளிவு அதற்கு ஏதாம் - ஆன்மா விளக்குப்போலே ஒளியா
யிருக்குமென்று சொன்ன தேறுதல் ஆன்மாவுக்கு அறிவில்லாதது கொண்டு
இருள் பொருந்தியிருக்குமென்று சொன்னதற்கு இது எப்படியாகும். நீதானே
விசாரித்துப்பார்; சன்னதியளவில் மன்னுஞ் செயல் உடல் காந்தம்போல
வாய்ந்ததென்ற தன்மையும் உணராப் புன்மையை யன்றே - ஆன்மாவி
னுடைய சன்னதி மாத்திரத்திலே பொருந்தப்பட்ட பிராணவாயுவானது
காரியப்படுத்த உடல் காரியப்பட்டுவரும். அதென்போலவென்னில்,
காந்தத்தின் சன்னதியிலேஇரும்புகாரியப்பட்டாற்போலவென்றுநீமுன்னே
சொன்ன தன்மையினையும் இப்போது விசாரியாத சிறுமையினையுடைய
வனானாய். இதன்றியும்; உயிர் உடல் இயக்கில் துயில்பெறுங்காலைச் செய்தது
என்- பிராணவாயுவானது உடலைக் காரியப்படுத்துமாயின் நித்திரைசெய்கிற
அவதரத்துப் பிராணவாயுவும் ஒக்கநிற்கச் செய்தே உடல் காரியப்படக்
கண்டோமில்லை, ஆகையால் ஆன்மா