பக்கம் எண் :

1234சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

105 பழமலம் நீங்க நிகழுங் காலை
ஏற்றோர் முகஒளி தோற்றும் கலனெனத்
தலைவன தருளுயிர் நிலவிடும் நிலவக்
110
 
காட்டத் தங்கி மாட்டத் தங்கிய
தன்மையும் அளத்துப் புல்வையின் நீப்பும்
போன்றது வாகித் தோன்றிடும் அதனாற்
பசுகர ணங்கள் சிவகர ணங்க
ளாக மாறி அறிவும்
ஏக மாம்உயிர் யானென தின்றே      13

மாத்திரத்திலே பிராணவாயுவானது பிராரத்தத்தைப் பொசிப்பித்துக் கொண்டு
வாராநிற்கும். இது பெத்தம். மேல் முத்தியானது: பழமலம் நீங்க நிகழுங்
காலை - இப்படிப் பிராரத்தம் பொசித்துக்கொண்டு வரச்செய்தே இவனுக்குச்
சகசமாயுள்ள ஆணவமலம் நீங்கத்தக்கதாக இருவினை யொப்பும் சத்தினி
பாதமும் உண்டான காலத்து; ஏற்றோர் முக ஒளி தோற்றுங் கலனெனத்
தலைவனது அருள் உயிர் நிலவிடும் - எடுத்துப் பார்த்தவர்கள் முகத்தினது
பிரிதிபிம்பந் தோன்றப்பட்ட கண்ணாடியைப் போலக் கர்த்தாவினுடைய
திருவருளும் ஆன்மாவினிடத்திலே பொருந்தாநிற்கும்; நிலவக் காட்டத்து
அங்கிமாட்டத் தங்கிய தன்மையும் அளத்துப் புல்வையின் நீப்பும்போன்று
அதுவாகித் தோன்றிடும் - இப்படி ஆன்மாவினிடத்திலே அந்தத் திருவருள்
பொருந்தவே விறகினிடத்திலே நெருப்பைக் கொளுத்தினபோது அந்த
விறகுக்கு உண்டாகிய தன்மை போலவும் உப்பளத்தில் புல்லும் வைக்கோலுங்
கூடின விடத்து இவை தன்னுடைய தன்மை கெட்டு உப்பான தன்மை
போலவும் இந்த ஆன்மாவும் தன்னுடைய தன்மை கெட்டு அந்த அருட்
சொரூபமாய்த் தோன்றாநிற்கும்; அதனாற் பசுகரணங்கள் சிவகரணங்களாக
மாறி அறிவும் ஏகமாம் உயிர் யான் எனது இன்றே - அப்படி இந்த
ஆன்மாப் பசுத்துவங் கெட்டுச் சிவத்துவமானபடியாலே பசுகரணங்களா
யுள்ளவையுந் தன் தன்மை கெட்டுச் சிவகரணங்களாக மாறி அறிவும்
இரண்டாக நில்லாமல் அருளோடுங் கூடி ஒன்றாம். பின்னை இந்த
ஆன்மாவுக்கு யான் எனது என்கிற பகுதி இல்லையாம்.             13