95 | மன்னும் ஆன்ம சன்னதி அளவிற் காந்த பசாசத் தேய்ப்ப வாய்ந்த உயிர்உடல் இயக்குஞ் செயலுறு பூட்டைப் பலவகை உறுப்பும் இலகிய தொழில்போல் ஐம்பொறி புலன்கள் இன்புறு மன்றே இனைய வாயிலின் நிகழ்தரு பயனவை அந்தக் கரணம் முந்தி உணர்ந்திடும் | | 100 | இவைஅகல் வுழிஐம் பொறிபுலன் நிகழா துயிர்நீங் கிடில்உடல் செயல்இல தன்றே இவ்வகை வினையின் செவ்விதின் நடத்தும் | ஒன்றும் அறிய வேண்டுவதில்லை; மன்னும் ஆன்ம சன்னதியளவில் காந்த பசாசத்து ஏய்ப்ப வாய்ந்த உயிர் உடல் இயக்கும்-நிலைபெற்று வாராநிற்கிற ஆன்மாவினுடைய சன்னதி மாத்திரத்திலே காந்தமானது அசைவற நிற்க அதன் சன்னதியிலே இரும்பு காரியப்பட்டாற்போல ஆன்மா விகாரமற நிற்கப் பொருந்தப்பட்ட பிராணவாயுவானது உடலைக் காரியப்படுத்தாநிற்கும்; செயலுறு பூட்டைப் பலவகை உறுப்பும் இலகிய தொழில்போல் ஐம்பொறி புலன்கள் இன்புறுமன்றே - சமைக்கப்பட்ட பூட்டைகளிடத்துப் பட்டடை யென்றும் தவிலென்றும் கதிரென்றும் சந்திரவளையமென்றும் பூணியென்றும் பலபல வகையாகச் சொல்லப்பட்டு வருகிற உறுப்புக்கள் தோறும் மிகுத்து வாராநிற்கிற தொழில்களைப்போல் இந்திரியங்கள் ஐந்துஞ் சத்தாதி விஷயங்களை அனுபவியாநிற்கும்; இனைய வாயிலின் நிகழ்தரு பயனவை அந்தக்கரணம் முந்தி உணர்ந்திடும்-மெய் வாய்கண் மூக்குச் செவியென்று சொல்லப்பட்ட இந்திரியங்களாலே கொண்ட சத்தாதி விஷயங்களை மனோபுத்தியாங்கார மென்கிற உட்கரணங்கள் அறியாநிற்கும்; இவை அகல்வுழி ஐம்பொறி புலன் நிகழாது - இந்த அந்தக்கரணங்கள் நீங்கின விடத்து ஐம்பொறிகளோடும் பஞ்சவிஷயங்கள் பொருந்தாது. இது சகலம்; உயிர் நீங்கிடில் உடல் செயலிலதன்றே - பிராணவாயு நீங்குமாயின் உடல்சேட்டையின்றி அவத்தைப்பட்டுக் கிடக்கும். இது கேவலம்; இவ்வகை வினையின் செவ்விதின் நடத்தும் - இப்படி ஆன்மாவின் சன்னதி |