பக்கம் எண் :

1232சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

90 இச்சா ரூபம் நச்சினர் என்னின்
மும்மலத் தேதும் இன்மைய தன்றே
இதுவளர் முத்திப் பதமென இயம்புவர்
ஈங்கிவை நிற்க.         12

13. சங்கிராந்தவாதி சங்கற்பம்

நீங்காது ஒளிர்உயிர்
விளக்கென நிற்கும் அளப்புறும் அறிவின்று
இறைவற் கேதும் அறியவேண் டின்றே

மூன்று தலைமுறையாக அரிசி நெல்லுக் குத்திவருகிற பெரிய உரலினிடத்திலே
ஒளி பொருந்தின கொம்புகளும் அதனுடைய நுனியிலே இளைய தளிர்களும்
உண்டானதென்று சொல்லுகிறதை யொக்கும் நீ மூன்று மலங்களும் நீங்கிப்
பரமுத்தியைப் பெற்றவிடத்திலே ஒரு சரீரம் உண்டாமென்று சொன்னது.
இதன்றியும்; இச்சாரூபம் நச்சினர் என்னின் - சுவேச்சையினாலே யெடுக்கப்
பட்டிருக்கிற சரீரத்தோடுங் கூடிப் பிரியப்பட்டிருந்தார்களென்று நீ சொல்லின்;
மும்மலத்து ஏதும் இன்மையதன்றே - ஒருவனுக்கு ஒரு சரீரமுண்டாமிடத்துக்
கன்மத்தாலே யொழிந்து உண்டாகாது; அந்தக்கன்மந்தான் ஆணவமலங்
கிடந்தாலொழிந்து உண்டாகாது. ஆகையால் முத்தியில் மலமாயா கன்மமான
மூன்று மலத்தின் ஒரு மலமும் உனக்குப் போனதில்லையாம்; இது வளர்
முத்திப் பதமென இயம்புவர் - இப்படி ஒரு சரீரத்தோடுங் கூடிக்கொண்டிருக்
கிற முத்தியைச் சாயுச்சியத்துக்கு ஏதுவாயிருக்கிற சாலோக்கியாதியாயுள்ள
பதமுத்திகளென்று காண் நல்லோர்கள் சொல்லுவார்கள்; ஈங்கு இவை நிற்க-
இவ்விடத்து நீ பழுதாகச் சொல்லிவந்த பெத்தமுத்திகளை விட்டு நான்
சொல்லுகிறதைப் புத்திபண்ணிக் கேட்பாயாக.                       12

     மேல் - சங்கிராந்தவாதி தன் மதம் கூறுகின்றான்;

     நீங்காது ஒளிர் உயிர் விளக்கென நிற்கும் அளப்புறும் அறிவு இன்று -
ஆன்மாவானது நீங்காத பிரகாசக்தோடுங் கூடிக்கொண்டிருக்கிற விளத்தைப்
போலே சுட்டற் நிற்கும், அது இது என்று அளவிட்டுச் சுட்டியறிகிற அறிவு
இதற்கு இல்லை; இறைவற்கு ஏதும் அறிய வேண்டின்றே கர்த்தா
நிர்விகாரியானபடியாலே அவனுக்கு