| 80 | அறிவினோ டறிவு பிறியாப் பெற்றி வேண்டும்என் பதற்கு ஈண்டிவர் இவ்வாறு இருப்பர் என்பதற் குருத்தான் வேண்டும் அண்ணல தருளின் நண்ணினர் இருப்பினும் | 85 | சீவன் முத்தரென் றோதினர் அகன்று நீங்கியும் உருவம் நீங்கா தாயின் ஓங்கிய முத்தி யாவதென் உரைக்க செடியுடல் அணுகாக் குடிலை கொடுக்குமென்று ஓதினை நீயே பேதாய் பகட்டுரல் ஒளிர்சினை முச்சித் தளிர்எனும் இதுதகும் | அறிவினோடு அறிவு பிறியாப் பெற்றி வேண்டும் என்பதற்கு - தான் நீக்க வந்த சரீரத்தோடுங் கூடி நிற்கிற ஆணவமலத்தினாலே மறைக்கப்பட்டிருக்கிற சிற்றறிவுடனே பேரறிவு கூடினவிடத்து இரண்டும் தன்னிற் பிறியாமல் ஒன்று பட்டு நிற்க வேண்டு மென்கிற இயல்பினுக்கு; ஈண்டு இவர் இவ்வாறு இருப்பர் என்பதற்கு உருத்தான் வேண்டும் - இவ்விடத்து அந்தப் பரமுத்தியைப் பெற்றவர்கள் முத்திரைப் பெற்றிருக்கிற பெரியோர்களது கூட்டத்தோடுங் கூடிக்கொண்டிருப்பார்க ளென்று நீ சொல்லுகிற இதற்கு இவர்களுக்கு ஒரு சரீரம் உண்டாகவேண்டும். இதன்றியும்; அண்ணலது அருளின் நண்ணினர் இருப்பினும் சீவன்முத்தரென்று ஓதினர் - கர்த்தாவினுடைய திருவருளோடுங் கூடினவர்கள் பரமுத்தியையடையாமல் இந்தச் சரீரத்தோடுங் கூடியிருந்தார் களாயினும் அவர்களுக்குச் சரீரத்தொந்தனையில்லை. அவர்களைச் சீவன் முத்தரென்று நல்லோர்கள் சொன்னார்கள். இப்படி நல்லோர்களாலே சொல்லப்பட்டிருக்கச்செய்தே; அகன்று நீங்கியும் உருவம் நீங்காதாயின் ஓங்கிய முத்தியாவது என் உரைக்க - இந்தச் சரீரத்தொந்தனையை நீங்காம லிருக்குமாயின் மிகுந்திருக்கிற பரமுத்தியவது எப்படிக் காண், சொல்லு. அப்படியன்று காணும்; செடியுடல் அணுகாக் குடிலை கொடுக்குமென்று ஓதினை நீயே - அந்த முத்தி இந்த அசுத்தமாயா சரீரம் பொருந்தாது, சுத்தமாயாசரீரத்தைக் கொடுக்க அந்தச் சரீரத் தோடுங்கூடி யிருப்பர்களென்று நீ சொன்னாய்; பேதாய் பகட்டுரல் ஒளிர்சினை முச்சித்தளிரெனும் இதுதகும் - அறிவில்லாதவனே, நாலு |