பக்கம் எண் :

1230சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்


70
அனைத்துந் தாக்காத் தனிப்பரத் துற்றவர்க்கு
எவ்வகை உணர்வு செய்வதென் செப்புக
ஒன்றின் ஒன்றாம் ஒன்றா துலகில்
நின்ற போதுயிர் நேராம் அன்றே
முத்தி உற்ற நற்றவர் அவையிடைச்
சேர்வர் என்றனை சார்தரு முத்தி
75 சாலோக் கியமோ சாயுச் சியமெனில்
பந்த முற்ற கந்தல கழித்த

தாக்காத் தனிப்பரத்து உற்றவர்க்கு - ஆகையால், ஒப்பில்லாததாய் எல்லா
வற்றிற்கும் மேலாயிருக்கிற சிவத்தோடுங் கூடினவர்களுக்குச்சர்வ மென்று
சொல்லப்பட்ட சொல்லினா லுண்டாகிய பயனெலாம் உண்டாகாது. அன்றியும்,
பெத்தம் நீங்கி முத்தனானபடியினாலே பழைய தன்மையென்னவும் ஒண்ணாது.
ஆகையால்; எவ்வகை உணர்வு செய்வது என் செப்புக - திருவருளைப்
பெற்றவர்களுடைய அறிவு எப்படி யிருப்பது தொழில் எப்படி யிருப்பதென்று
சொல்லுவாயாக; இது சிவனைப் பெற்ற ஆன்மாக்களுக்குச் சர்வஞ்ஞத்துவம்
உண்டாம் என்பதனை மறுத்தது, இதுவன்றியும்;

     ஒன்றின் ஒன்றாம் ஒன்றாது உலகில் நின்ற போது உயிர் நேராமன்றே
- முத்தியில் ஆன்மாவுஞ் சிவமும் ஒன்றாமென்னில் ஒரு முதல் இல்லையாம்.
அப்படிப் பரமுத்தியடையாமல் சரீரத்தோடுங் கூடிச் சீவன்முத்தனாய் நின்ற
தென்னில் அப்படி நின்ற ஆன்மா சிவனுக்குச் சமமாம். ஆகையால் இது
அர்த்தமன்று. இதன்றியும்; முத்தியுற்ற நற்றவர் அவையிடைச் சேர்வர்
என்றனை - திருவருளைப் பெற்றவர்கள் முன்னே முத்தியைப் பெற்றிருக்கிற
நல்ல தவத்தையுடைய பெரியோர்கள் கூட்டத்தின் நடுவே சென்று கூடி
யிருப்பர்களென்று நீ சொன்னாய்; சார்தருமுத்தி சாலோக்கியமோ - இப்படிச்
சென்று பொருந்தினார்களென்று நீ சொன்ன முத்தி சரியைத் தொழிலுக்கு
உண்டாகிய சாலோக முத்தியைச் சொன்னாயோ; சாயுச்சியம் எனில் -
அப்படியன்று காணும், நான் ஞானபாதத்துக்கு உண்டாகிய சாயுச்சியத்தைக்
காணுஞ் சொன்னேனென்னில்; பந்தமுற்ற கந்தலகழித்த