| 60 | சிற்றறி வெனும்இச் சொல்தவ றாகும் என்பதென் அலகை தன்பத மடைந்தோர் கொண்ட வாறு கண்டனம் என்னில் மூங்கை அந்தருற் றோங்கிய குணங்குறி செய்ததென் இன்னும் பவ்வமுற் றழுந்தினும் | | 65 | நாழி கொள்ளா தாழியில் அலைபுனல் அதனாற் கருத்து முதலுள தாக வேண்டும் அன்றே ஈண்டினி அமையும் எல்லாம் எனும்இச் சொல்லாற் படும்பொருள் | பதிகையினாலே இவனும் எல்லாவற்றையும் அறிவனென்று நீ சொல்லில்; சிற்றறிவெனும் இச் சொல் தவறாகும் - இந்த ஆன்மாவைக்கிஞ்சிஞ்ஞனென்று வேதாகம புராண சாத்திரங்கள் சொல்லுகிறது பழுதாம்; என்பது என் அலகை தன் பதமடைந்தோர் கொண்டவாறு கண்டனம்என்னில் என்று நீர் சொல்லுகிற தென்னை? பேயினுடைய பதவியைப் பெற்றவர்கள் அந்தப் பேய்க்குண்டாகிய வருகாலநிகழ்ச்சி களையெல்லம் தங்களிடத்திலே கொண்டு சொன்னவா றெல்லாம் கண்டோமே என்னில்; மூங்கை அந்தர் உற்றோங்கிய குணம் குறி செய்ததென் ஊமையுமாய்க் கண்ணிரண்டுந் தெரியாதவனுமாயிருந்தா னொருத்தன், அவனிடத்திலே இவையெல்லாங் குறைவற்றிருக்கிறதொரு பேய் வந்து பொருந்தினவிடத்து, அவன்நா வழங்கி ஒன்றைச் சொன்னதுமில்லை, கண் தெரிந்து ஒன்றைக் கண்டதுமில்லை. ஆகையால் பேயின் தன்மை யெல்லாம் பிடியுண்டவனுக்கு உண்டாகாது; இன்னும் பவ்வமுற்று அழுந்தினும் நாழிகொள்ளாது ஆழியில் அலை புனல் - இதன்றியும் சமுத்திரத்தோடு கூடிஆழ முகந்ததாயினும் நாழியானது அந்தச் சமுத்திரத்திலே அலையப் பட்டிருக்கிற புனலெல்லாங் கொள்ளமாட்டது; அதனாற் கருத்து முதலுளதாக வேண்டும் - அப்படியிருக்கையினால் பேரறிவோடு கூடியிருந்தாலும் பசுவுக் குள்ள அறிவுண்டா மொழிந்து பதிக்கு உண்டான அறிவெல்லாம் உண்டாகாதாகவேண்டும்; அன்றேஈண்டு இனி அமையும் - அனாதியே இப்படி வருகையால் நீ அருளோடுங் கூடின ஆன்மா எல்லாவற்றையும் அறியுமென்று சொன்ன சொல்லை இனி விட்டு விடுவாயாக; எல்லாம் எனும் இச் சொல்லாற்படும் பொருளனைத்துந் |