பக்கம் எண் :

1228சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்


55
இருந்த வாஎனத் தெரிந்திட வேண்டும்
தெரியா தாயிற் புரியிற் கடுங்கனல்
எரிந்த தென்னும் இதுதகும் அன்றியும்
அவன்இவன் ஆகில் இவன்அவன் செய்தி
என்று செய்வான் ஒன்றிய மதத்தாய்
எல்லாம் அறிதல் செல்லா துயிர்கள்

அவனை அந்தப் பேய் விட்டு நீங்கின அவதரத்துப் பின்பு உண்டாகிய
செயல்களெல்லாம் இவனுடைய செயலாமோ அந்தப் பேயினுடைய
செயலாமோ? அதெல்லாம் இவனுடைய செயலாமாகில் அந்தப் பேய்
பிடித்துக்கொண் டிருக்கிற பொழுது இவன் செய்த தொழில்களெல்லாம்
அந்தப் பேயினுடைய செயல்களாகி யிருந்ததாமென்று அறிந்திட வேண்டும்;
தெரியாதாயின் - அப்படிப் பேயினுடைய செயலாயிருந்த தென்று அறியப்
படாதாயின்; புரியிற் கடுங்கனல் எரிந்த தென்னும் இது தகும் -புரியினிடத்துக்
கடிதாயுள்ள அக்கினியானது கூடி நின்று தன்னுடைய தொழில்களைச் செய்து
போனாற் போலச் சிவனும் ஆன்மாவினிடத்திலே பதிந்து நின்று தன்னுடைய
தொழில்களைச் செய்துபோன தொழிந்து ஆன்மா சிவனுடைய தொழிலைச்
செய்யமாட்டாது; அன்றியும் அவன் இவனாகில் இவன் அவன் செய்தி என்று
செய்வான் - இதன்றியும் அந்தச் சிவனோ வென்றால் ஒரு காலத்திலும்
நாசமில்லாம லிருப்பானொருத்தன், இந்த ஆன்மாவோ என்றால்
கணப்பொழுதிற்குள்ளே நாசமடைந்து போவானொருத்தன், இப்படிக்கொத்த
ஆன்மா அப்படிக்கொத்த சிவனுடைய தொழில்களைச் செய்தானாமாயினும்
எந்தக்காலத்திலே செய்து நிறைவேற்றுவான்; ஒன்றிய மதத்தாய - பொருந்தப்
பட்டிருக்கிற உன்மத்தத்தோடுங் கூடியிருந் துள்ளவனே, இதற்கு உத்தர
முண்டாகிற் சொல். இது ஆன்மா பஞ்சகிருத்தியஞ் செய்யுமென்பதனை
மறுத்தது.

     எல்லாம் அறிதல் செல்லாது உயிர்கள் - முத்தியிற் பஞ்சகிருத்தியஞ்
செய்யுமென்று சொன்னதை யன்றியும் ஆன்மாவுக்குச் சர்வக்கியத்துவமும்
உண்டாமென்று நீ சொன்னாய். எல்லாவற்றையும் அறியுமென்கிற பகுதி
ஆன்மாவினிடத்து உண்டாகாது, எல்லாவற்றையும் அறிந்திருக்கிற திருவருள்
இவனிடத்திலே