பக்கம் எண் :

11. சிவசமவாதி சங்கற்பம்1227


45 அங்கியும் ஒன்றைத் தங்கிநின் றல்லது
தன்தொழில் நடத்தா தென்றறி இனிநீ
இரும்பனற் செய்தி தரும்பரி சுளதே
அதுவென்ஓர் அலகை பொதிதருங் காலை
அதன்செயல் அனைத்தும் இவன் செயல் ஆமால்
50 அவன்இவன் ஆகில இவன்அவன் செய்திக்கு
என்அவை என்னிற் பின்னுறு செயலும்
அதன்செய லன்றி இவன்செய லாகில்
இவன்செயல் பேயின் தன்செயல் ஆகி

பட்ட துண்டாமாயிற் காட்டுவாயாக; அங்கியும் ஒன்றைத் தங்கி நின்றல்லது
தன்தொழில் நடத்தாதென்று அறி இனி நீ-அக்கினியும் ஒருவிறகை இரும்பைச்
சார்ந்து நின்று தன்னுடைய தொழிலைச் செய்யுமதொழிந்து தனியே ஒரு
முதலாக நின்று தன்னுடைய தொழிலைச் செய்யமாட்டது என்றறிவாயாக.
ஆகையால்; இரும்பு அனற்செய்தி தரும் பரிசு உளதே - அக்கினி இரும்பைச்
சார்ந்து நின்று தன்னுடைய தொழில் செய்து போனதொழிந்து இரும்பு
அக்கினியினுடைய தொழிலைச் செய்யும் பரிசுண்டாகாது. ஆகையால்,
திருவருளைப் பெற்ற ஆன்மாக்கள் பஞ்சகிருத்தியஞ் செய்வார்களென்று நீ
சொன்னது அர்த்தமன்று; அது என் ஓர் அலகை பொதிதருங்காலை அதன்
செயலனைத்தும் இவன் செயலாமால்-அப்படி நீர் பஞ்சகிருத்தியஞ் செய்யா
தென்று சொல்லுகிற தென்ன, ஒரு பேயானது ஒருத்தனை வந்து பிடித்துக்
கொண்டவிடத்து, அந்தப் பேயினுடைய செயலாயுள்ளதெல்லாம் இவனுடைய
செயலாகக் காணப்பட்டதோ இல்லையோ? ஆகையால், அருளைப்பெற்ற
ஆன்மாக்கள் பஞ்சகிருத்தியஞ் செய்வர்களென்று நீ சொல்லில்; அவன்
இவனாகில் இவன் அவன் செய்திக்கு என் - அந்தச் சிவன் இந்த ஆன்மாவா
யிருந்து தன்னுடைய தொழில்களைச் செய்தானாமாகில் இந்த ஆன்மா
அந்தச்சிவனுடைய தொழிலைச் செய்கைக்கு என் கொண்டது; அவை
யென்னில் - அந்தச் தொழில்களைச் செய்கைக்கு இந்த ஆன்மா உரித்
தென்று நீ சொல்லில்; பின் உறு செயலும் அதன் செயலன்றி இவன்
செயலாகில் இவன் செயல் பேயின் தன் செயலாகி இருந்தவா வெனத்
தெரிந்திடவேண்டும் - ஒருவனைப் பேய் பிடித்துக்கொண்டிருந்து