பக்கம் எண் :

1226சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

இன்னவை கிடக்க முன்னவன் தன்மை
எய்தினர் எல்லாச் செய்தியுஞ் செய்வர்.
இரும்பெரி எய்தித் தருஞ்செயல் தகவெனிற்
40 பொருள்நிலை கிடக்க ஒருதிட் டாந்தப்
பேறே ஆயிற் சீறாக் கதுவிய
புனல்ஒரு புடைசேர் கனல்தகு மாயினும்
வேறொரு பொருளை நீறாக் கிலதே
நெருப்பெனும் இதனின் உருத்தனி காட்டுக

சொன்னது அர்த்தமன்று; இன்னவை கிடக்க முன்னவன் தன்மை எய்தினர்
எல்லாச் செய்தியும் செய்வர் - இவையெல்லாம் மேல் நீர் சொல்லுகிறீர், இது
கிடக்கிறது, கர்த்தாவினுடைய திருவருளைப் பெற்றவர்கள் அவன் செய்கிற
சிருட்டி திதி சங்கார திரோபவஅனுக் கிரகமென்கிற தொழில்களெல்லா
வற்றையுஞ் செய்வர்கள். அது எங்ஙனேயென்னில்; இரும்பு எரி எய்தித்
தருஞ் செயல் தகவெனில் இரும்பானது அக்கினியோடுங் கூடி அக்கினியினது
சொரூபத்தைப் பெற்றவிடத்து அந்த அக்கினி செய்கிற தொழில்க
ளெல்லாவற்றையும் இரும்பு செய்தாற்போல என்று நீ சொல்லில்; பொருள்
நிலை கிடக்க ஒரு திட்டாந்தப் பேறேயாயில் - திருவருளைப் பெற்ற
சுந்தரநாயனாராற் பஞ்சகிருத்தியஞ் செய்யப்பட்டதில்லை யென்று
பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கச்செய்தே அதைப் போட்டு இரும்பும்
அக்கினியும்போல வென்று திட்டாந்தத்தினாலே உனக்குச் சாதிக்கலாமாகில்;
சீறாக் கதுவிய புனல் ஒரு புடைசேர் கனல் தகுமாயினும் - கோபத்தோடுங்
கூடியிருக்கிற செலவினையுடைய தண்ணீரானது ஒரு பக்கத்திலே பொருந்தி
யிருக்கிற அக்கினியோடுங் கூடி ஐக்கியம் வந்திருந்தாயினும்; வேறொரு
பொருளை நீறு ஆக்கிலதே - அக்கினியைச் சேர்ந்த இரும்புபோல இந்த
வெந்நீர் வைக்கோல் முதலாயினவற்றைச் சுட்டுப் பொடியாக்கமாட்டது. அது
தண்ணீரோடுங்கூடி நிற்கையினாலே வைக்கோல் முதலாயினவற்றைச்
சுட்டதில்லைக்காணும், தனியே நின்றதாயிற் சுடுமென்று நீ சொல்லில்;
நெருப்பெனும் இதனின் உருத்தனி காட்டுக - நெருப்பென்று சொல்லப் பட்ட
இந்தப் பூதத்தினுடைய சொரூபம் தனியே நின்று காரியப்