பக்கம் எண் :

11. சிவசமவாதி சங்கற்பம்1225


30 ஈசன தியல்பரு ளெய்துயிர் இயற்றல்
பேசுதல் தவறெனப் பெருமறை அறைய
ஐந்தொழில் உயிரும் தந்திடல் தகுமே
ஆவதென் முன்நாள் நாவலர் பெருமான்
பண்டொரு முதலை உண்ட மைந்தனை
35 வரவழைத் தனன்என் றாய்பிழைப் பிலததூஉம்
தந்திட வேண்டும் என்றன ரன்றே

     ஈசனது இயல்பு அருள் எய்து உயிர் இயற்றல் பேசுதல் தவறெனப்
பெருமறை அறைய - கர்த்தாவுக்கு உண்டாகிய பஞ்சகிருத்தியம் திருவருளைப்
பெற்ற ஆன்மாக்கள் செய்யுமென்று சொல்லுகிறது குற்றமென்று பெரிய
வேதமானது சொல்லச் செய்தே; ஐந்தொழில் உயிரும் தந்திடல் தகுமே -
மதத்துக்கு மகத்தாயிருக்கிற சிவனாலே செய்யப்பட்டு வருகிற பஞ்சகிருத்தியம்
அணுவாயிருக்கிற ஆன்மாவினாலே செய்யப்படுமென்கிறது தகாது; ஆவது
என் முன் நாள் நாவலர் பெருமான் பண்டு ஒரு முதலையுண்ட மைந்தனை
வரவழைத்தனன் என்றாய் - அப்படி நீ சொல்லுகிறது என்னதான் !
முற்காலத்திலே வித்துவான்களுக்கெல்லாம் இராசாவாயுள்ள நம்பியாரூரன்
திருப்புக்கொளியூரிலே இரண்டு பிரமாணப் பிள்ளைகள் ஒரு குளத்திலே
குளிக்கச் செய்தே ஒரு பிள்ளையை முதலை விழுங்கி மூன்று வருஷஞ்
சென்றதற்குப் பின்பு மீளவும் அந்த முதலைவாயிலே நின்றும் அழைத்தன
னென்று நீ சொன்னாய்; பிழைப்பிலது அதூஉம் தந்திடவேண்டும் என்ற
னரன்றே - அப்படி நீ சொன்னது குற்றமில்லை. அந்த முதலை வாயிலே
நின்று பிள்ளையை மீள அழைத்தற்குத் திருப்பாட்டு; [சுந்தரர் ; அவிநாசி - 4]

     உரைப்பா ருரையுகந் துள்கவல் லார்தங்க ளுச்சியாய்
     அரைக்கா டரவா ஆதியும் அந்தமு மாயினாய்
     புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி னாசியே
     கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.

இப்படித் தேவரீர் இந்தப் பிள்ளையைத் தந்தருள வேணுமென்று சொன்ன
தொழிந்து தாமாக அழைத்ததில்லை. ஆகையால், திருவருளைப் பெற்ற
ஆன்மா பஞ்சகிருத்தியஞ் செய்யுமென்று நீ