பக்கம் எண் :

176 திருமுறைத்தலங்கள்


இது முதற்பராந்தகனின் முதல் மகன் ; இராசாதித்தனால் கட்டுவிக்கப் பெற்றது
என்பது கல்வெட்டுச் செய்தி.

  “கோவல னான்முகன் வானவர் கோனுங் குற்றவேல் செய்ய
   மேவலர் முப்புரந்தீ யெழுவித்தவன்ஓர் அம்பினால்
   ஏவலனார் வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை யாளுங் கொண்ட
   நாவலனார்க்கு இடமாவது நந் திருநாவலூரே.”
                                            (சுந்தரர்)

                                   -‘பன்னரிதாம்
   ஆவலூர் எங்களுடை யாரூர னாரூராம்
   நாவலூர் ஞானியருண் ஞாபகமே.’             (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. பக்தஜனேஸ்வரர் திருக்கோயில்
     திருநாவலூர் & அஞ்சல் - 607 204.
     உளுந்தூர்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம்.

49. திருமுதுகுன்றம்

விருத்தாசலம்

     நடுநாட்டுத் தலம்.

     திருமுதுகுன்றம் - தமிழ்ப்பெயர். விருத்தாசலம் என்பது சமஸ்கிருதப்
பெயர். தற்போது வழக்கில் விருத்தாசலம் என்றே வழங்கப்படுகிறது.

     சென்னை - திருச்சி ரயில்மார்க்கத்தில் (Chord line) விழுப்புரத்தை
அடுத்துள்ள ரயில் சந்திப்பு நிலையம், திருச்சியிலிருந்தும்
விழுப்புரத்திலிருந்தும் பேருந்து வசதிகள் அடிக்கடி உள்ளன.

     இத்தலத்திற்கு ‘விருத்த காசி’ என்றும் பெயருண்டு. பண்டை நாளில்
இத்தலத்துள்ளோர் காசிக்குச் செல்வதில்லை என்ற மரபு இருந்ததாகத்
தெரிகின்றது.