-தண்காட்டிக் கார்காட்டித் தையலர்தங் கண்காட்டிச் சோலைகள்சூழ் சீர்காட்டுப் பள்ளிச் சிவக்கொழுந்தே. (அருட்பா) அஞ்சல் முகவரி :-1 அ/மி. ஆரண்யசுந்தரேஸ்வர் திருக்கோயில் கீழைத்திருக்காட்டுப்பள்ளி - திருவெண்காடு அஞ்சல் சீர்காழி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம் - 609 114. 67/13. திருக்குருகாவூர். திருக்கடாவூர். | சோழநாட்டு (வடகரை)த் தலம். பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்தருள் செய்து பசிபோக்கிய தலம். மக்கள் வழக்கில் திருக்கடாவூர் என்று வழங்குகிறது. சீர்காழியிலிருந்து தென் திருமுல்லைவாயில் செல்லும் சாலையில் 6- ஆவது கி.மீ.ல் வடகால் என்னும் ஊரில், சாலையில் குருகாவூருக்குச் செல்லும் பாதை பிரிகின்றது. (வழிகாட்டிப் பலகையும் உள்ளது.) அப்பாதையில் சென்றால் 1 கி.மீ.ல் குருகாவூரையடையலாம். ஊர்க்கோடியில் கோயில் உள்ளது. ஊர் - குருகாவூர். கோயில் - வெள்ளடை. இறைவன் - சுவேதரிஷபேஸ்வரர், வெள்ளடையீஸ்வரர், வெள்ளடைநாதர். இறைவி - நீலோத்பல விசாலாட்சி, காவியங்கண்ணி. தீர்த்தம் - பால் கிணறு. கோயிலுக்கு வெளியில் தனிச்சுற்று மதிலுடன் உள்ளது. தைமாதத்தில் அமாவாசை நாளில் இறைவன் எழுந்தருளி இங்குத் தீர்த்தம் கொடுப்பது சிறப்பானது. |