விந்தையான அமைப்புடையது - யோக தட்சிணாமூர்த்தி, சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறதாம். நாடொறும் நான்கு கால பூஜைகள். மாதவிழாக் களுடன் நவராத்திரி, பிரதோஷ காலங்கள், தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலியவை சிறப்பாக நடைபெறுகின்றன. வைகாசி விசாகத்தில் பெருவிழா. அண்மையிலுள்ள தலம் திருவெறும்பியூர். கல்வெட்டில் இத் தலம் “பாண்டிகுலாசினி வளநாட்டு வடவீர நாட்டு திரு நெடுங்களம்” என்றும் ; இறைவன் பெயர் ‘நெடுங்களத்து மகாதேவர்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளது. 30-1999ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்தலத்தில் 30க்கு மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. “நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத என் அடியான் உயிரை வௌவேல் என்றுஅடற் கூற்றுதைத்த பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும் நின் அடியார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.” (சம்பந்தர்) “தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி எடுங்கள் அத்தா என்னாமுன் ஏழை மடநெஞ்சே நெடுங்களத்தான் பாதம் நினை.” (ஐயடிகள் காடவர்கோன்) -துன்றுகயற் கண்ணார் நெடுங்களத்தைக் கட்டழித்த மெய்த்தவர்சூழ் தண்ணார் நெடுங்களமெய்த் தாரகமே. (அருட்பா) அஞ்சல் முகவரி :-
அ/மி. நித்தியசுந்தரேஸ்வரர், நெடுங்களநாதர் திருக்கோயில் திருநெடுங்களம் & அஞ்சல் - 620 015. திருச்சி வட்டம் - மாவட்டம். |