பக்கம் எண் :

690 திருமுறைத்தலங்கள்


     இத்தலம் பிதிர்முத்தித் தலங்களுள் ஒன்றாகும். ஆகவே பிதிர்
வழிபாடுகளைச் செய்வதற்கு இத்தலம் மிகவும் விசேஷமானது. மூன்று நிலை
ராஜகோபுரம். வாயிலில் விநாயகர், முருகன் காட்சியளிக்கின்றனர். எதிரில்
குளம், கொடிமரம், நந்தி பலிபீடமுள்ளன. பிராகாரத்தில் சூரியன், அகத்தியர்,
இடும்பை, விநாயகர், சனீஸ்வரர், கஜலட்சுமி, முருகன், பைரவர் சந்நிதிகள்
உள்ளன. தலவிநாயகர் மகாமண்டபத்தில் காட்சி தருகிறார்.

     அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. கோஷ்டங்களில்
தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
வைகாசியில் விழா நடைபெறுகிறது. அருகில் உள்ள தலம் கடிக்குளம்.
மராட்டிய மன்னர்கள் இக்கோயிலுக்கு அளவற்ற மான்யங்களை அளித்துள்ள
செய்தியைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

   
  “நீறேறிய திருமேனியர் நிலவும் உலகெல்லாம்
     பாரேறிய படுவெண்டலை கையிற் பலிகொள்ளா
     கூறேறிய மடவாளொடு பாகம் மகிழ்வெய்தி
     ஏறேறிய இறைவர்க்கிடம் இடும்பாவனம் இதுவே.”    (சம்பந்தர்)

                                      - பொங்குபவ
     அல்லல் இடும்பாவ நத்தமட்டொளி செய்கின்ற திரு
     மல்லலிடும் பாவனத்து மாட்சிமையே.          (அருட்பா)


அஞ்சல் முகவரி:-

     
அ/மி. சற்குணேஸ்வரர் திருக்கோயில்
     இடும்பாவனம் & அஞ்சல் - 614 735
     திருவாரூர் மாவட்டம்.

226/109. கடிக்குளம்

கற்பகநாதர் குளம்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மக்கள் கற்பகநாதர் குளம் என்று வழங்குகின்றனர். (அஞ்சல்
துறையிலும் கற்பகநாதர் குளம் என்றே வழங்குகிறது.) கடிக்குளம் - கோயிலில்
உள்ள தீர்த்தத்தின் பெயர். இதுவே ஊர்க்குப் பெயராயிற்று.