பக்கம் எண் :

748 திருமுறைத்தலங்கள்


     நாடொறும் நான்கு காலபூஜைகள். கந்தசாமிப் புலவர் பாடியுள்ள
தலபுராணம் உள்ளது.

     
“முற்றும் சடைமேல் முதிரா இளம் பிறையன்
     ஒற்றைப்பட அரவம் அதுகொண்டு அரைக்கணிந்தான்
     செற்றமில் சீரானை திருஆப்பனூரானைப்
     பற்றும் மனமுடையார் வினை பற்றறுப்பாரே”.
                                            (சம்பந்தர்)

                                - “சீலர்தமைக்
     காப்பனூரில்லாக் கருணையால் என்றுபுகும்
     ஆப்பனூர் மேவு சதானந்தமே.                  (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி.ஆப்புடையார் திருக்கோயில்
     ஆப்புடையார் கோயில் & அஞ்சல்
     மதுரை - 625 002.

247/3. திருப்பரங்குன்றம்

     பாண்டிய நாட்டுத் தலம்.

     மதுரைக்குப் பக்கத்தில் உள்ளது. மதுரையிலிருந்து நகரப் பேருந்து
செல்கிறது. புகைவண்டி நிலையம், முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுள்
முதலாவதாக விளங்கும் தலம். கோயில்வரை வாகனங்கள் செல்லும்.
முருகப்பெருமான் தெய்வயானையை மணம் புரிந்த தெய்வப் பதி.

     நக்கீரர் வாழ்ந்த தலம். பராசரமுனிவரின் புதல்வர், நக்கீரர்,
சிபிமன்னன், பிரம்மா ஆகியோர் இறைவனை வழிபட்டுப் பேறுபெற்ற பதி.
இத்தலம் சிவத்தலமாயினும், இன்றைய நடைமுறையில் முருகனுக்குரிய
சிறப்புதலமாகவே வழிபடப்படுகின்றது.

     இறைவன் - பரங்கிரிநாதர்.
     இறைவி - ஆவுடைநாயகி.