|
(பொ
- ரை) இவ்விதமாக மானதயாத்திரை மிகவும் செய்து
பெருமானாகிய கிறிஸ்தியேசுவுக்குப் பக்திசெய்கின்ற நண்பன் ஒருவன்
உளன். அவன் தூய்மையான ஜீவிய நடை கடைப்பிடித்த ஓர் சுகிர்தன்.
இந்தப் பெரிய உலகத்தினது மயக்கத்தை ஒழித்த சிறப்பையுடைய ஞானி.
| |
எம்பி
ரான்றிருச் சித்தமே எனதுபாக் கியமென்
றும்பர் நாயகன் பணிபுரிந் தொழுகுமவ் வுரவோன்
இம்ப ரோர்சிறை யிருந்துழி யோகநித் திரையில்
தம்பி ரானருள் சமைத்தது தரிசன மொன்றை. 9
|
(பொ
- ரை) எம்பிரான் திருச்சிதமே யெனது பாக்கியமென்று
தேவனாயகனுக்குத் திருப்பணிவிடை புரிந்தொழுகும் அந்தமேலோன்
இவ்வுலகத்தில் ஓர் சிறைச்சாலையில் இருக்கின்ற காலத்தில் அவனுடைய
யோக நித்திரையில் ஒரு தரிசனத்தைத் தம்பிரானுடைய அருளானது
அவனுக்கு உண்டாக்கினது.
| |
தன்ன
கத்துளே தோன்றிய தரிசனந் தரணி
மன்னு யிர்க்கிர க்ஷணைவழி மரபினை வகுக்கும்
என்ன வுன்னித்தன் னினத்தருக் கெழுதுபா சுரமாப்
பன்னு வேன்வெளிப் படையிலென் றூக்கினன் பகர்வான். 10
|
(பொ
- ரை) தன்னுடைய இருதயத்துக்குள்ளே தோன்றிய இந்தத்
தரிசனமானது உலகத்திலேயுள்ள நிலைபெற்ற ஜீவகோடிகளுக்கு
இரட்சணிய வழியின் தன்மையை வகுத்துக்காட்டும் என்று மனதிலே
நினைத்து, அதனைத் தன் இனத்தவருக்கு எழுதும் ஒரு பாசுரமாக
வெளிப்படையாய்ச் சொல்லுவேன் என்று உற்சாகமடைந்து சொல்லுவான்.
வரலாற்றுப்படலம்
முற்றிற்று
----------------------------------
|