| |
ஒருநான்
வழியே பாவ முலகத்தை யுடற்றா நிற்ப
ஒருநர தேவ னீட்டும் புண்ணிய முலகுக் கந்தப்
பருவரல் துடைத்து நித்ய பரகதிப் பயனை நல்கல்
திருவருண் மாட்சிக் கேற்ற திவ்விய முறையென் றோர்தி.
|
446 |
| |
|
|
| |
நம்பிரா
னுயிர்த்தெ ழுந்த நலம்பெறு முகூர்த்தந் தன்னில்
அம்புவி யதிர வஞ்சிக் காவல ரயர்ந்து வீழ
உம்பர்நின் றிழிந்த தேவ தூதரோ ரிருவ ரொல்லை
இம்பரிற் சேம வைப்பை யெதிர்ந்தனர் பகைவ ரெஞ்ச.
|
447 |
| |
|
|
| |
இருள்புலர்
காலை கண்ட வேந்திழை மாரோர் மூவர்
தெருளுறீஇ யெழுந்தெம் மையன் சேமவைப் பதனை யண்மி
மருளறச் சமாதி வாயில் திறவுண்ட மரபை நோக்கி
வெருளுறீஇக் கலங்கி நின்றார் வெய்துளந் திகைத்து மாதோ.
|
448 |
| |
|
|
| |
ஆயிடை
யருகர் நின்று மவிரொளி மின்னி னார்ந்த
தூயுடை பரித்த தேவ தூதரோ ரிருவர் தோன்றி
நீயிரிச் சேம வைப்பி னேடுவ தெவன்கொல் ஜீவ
நாயகன் றன்னை முன்ன நவின்றவா சகத்தை யோர்மின்.
|
449 |
| |
|
|
| |
ஈண்டுளா
ரல்லர் ஜீவ னியைந்தெழுந் தருளி னாரக்
காண்டகு நம்பி நும்முன் கலிலெய நாடு சேர்வர்
பூண்டமெய் யன்ப ருக்குட் புகலுமிப் புதுமை யென்னாச்
சேண்டலத் தெழுந்து போனார் நிகழ்ந்தவை தெரியச் செப்பி.
|
450 |
| |
|
|
| |
வேறு
|
|
| |
|
|
| |
உன்ன
தேசனு யிர்த்தெழுந் தாரெனச்
சொன்ன சொல்லமு தஞ்செவி தோய்தலும்
மன்னு நித்திய வாழ்வுகை வந்தெனப்
பொன்ன னார்க்குட்சி றந்தது புத்துயிர்.
|
451 |
| |
|
|
| |
வள்ளல்
சொற்றவ சனமும் வைகறைப்
பள்ளி நின்றெழு பான்மையுந் தம்முளே
உள்ளி யுள்ளத்து வட்டெழு மோகையுந்
தெள்ளி தச்சமுங் கொண்டுதி யங்கினார்.
|
452 |
| |
|
|
| |
உரையி
றந்தவு வகைப்பெ ருங்கடல்
கரைபு ரண்டுக தித்ததுக் காக்கினி
விரைவின் மாய்ந்திட மெல்லிய லாரெழுந்
துரைசெய் வாந்திருத் தொண்டர்க்கென் றோடினார்.
|
453 |