| |
மாமறை
ஓது - மெய்ச்சுருதியை வாசித்துப் பாராயணஞ் செய் கின்ற.
இமக்குடில் ஊடுறநாடுவார் - பனியால் மிகக் குளிர்ந்துள்ள குடி
சைகளில் வசிக்கும் ஏனைய தொண்டர் குழாத்தைச் சந்திக்க
வருவார். எ - று. |
|
|
| 23. |
ஆய
- மேற்சொல்லப்பட்ட வகையாய்.
மாது அரண் இவரும் ஆடவர் - விரும்பத்தக்க மலைசூழ்ந்த
அந்தப் பிரதேசஸ்தருக்கு.
ஆய - உண்டாகிய.
மா தரணி நிதிப்பெட்டியும் - பெரிய பூஸ்திதியும், திரவிரம் பொ
திந்துவைத்திருக்கிற கருவூலமும்.
ஆயமாதர் அணிகலப் பேழையும் - மேய்ப்பருடைய ஸ்திரீஜாதி
களுக்குரிய பலவகையாய ஆபரணங்கள் நிரைந்துள்ள பெட்ட
கங்களும்.
ஆய - நாம் எவையென்று ஆராயுமிடத்து.
மா தரணீதரன் ஆணையே - மகத்துவ அரசன் அருளிச்செய்த விதி
விலக்குகளடங்கிய வேதமே. எ - று. |
|
|
| 24. |
சந்த
நந்தம் திகழந் தடங்களில் - அழகிய சங்குகள் குழுமி
விளங் குகின்ற மடுக்களிலும்.
சந்து அனந்தம் திகழ்தடம் சாரலில் - சந்தன விருக்ஷங்கள்
அனந்த மாக விளங்குகின்ற பெரிய மலைச்சார்விலும்.
வந்து அல்நந்து அந்திமாலையுங் காலையும் - அம்மலைவாசிகள்
வந்து இரவை வருவிக்கும் அஸ்தமனத்துக்குமுந்திய
மாலைநேரத்தும் பிராதகாலத்தும்.
வந்தனம் தந்து இறைவனை வாழத்துவார் - பரலோகத்தரசனை
நமஸ்கரித்து ஸ்தோத்திரஞ் செய்வார்கள். எ - று. |