| 20. |
கொழம்பொழில்
கோடடுமாக் கிளை தூங்கும் - கொழுமையுள்ள
மலைச்சோலையிற் கொம்புள்ள மிருகஜாதிகள் தம்மினத்தோடு
துயிலும்.
சொழுங்கனி கோட்டு மாக்கிளை தூங்கும் - நறுங்கனிவர்க்கங்கள்
கவடுரளுள்ள பெரிய விருக்ஷங்களின் கொம்புகளிற் குலைகுலை
யாகத் தொங்கிக்கொண்டிருக்கும்.
குளிர்புயல் கோட்டு மால்வரை தூங்கும் - குளிர்ச்சியுள்ள கருமேக
சாலங்கள் பெரிய பர்வத சிகரங்களிற் படிந்து கவிந்துகொண்
டிருக்கும்.
குளிர்மது கோடடு மால்வரை தூங்கும் - குளிர்ந்த மது பிந்துக்கள்
கோணலாக வளர்ந்த பெரிய மூங்கிற்பண்ணையில் கூட்டிய தேன்
தட்டுகளினின்றும் இடைவிடாது துளித்துக்கொண்டிருக்கும்.
எ - று. |
|
|
| 21. |
மான்
- மான்ஜாதியும்.
மதம்படு - மதத்தைச் சொரிகின்ற.
மைவரை - கரிய மலைபோன்ற யானைக்கூட்டங்களும்.
கோளரி - சிங்கத்திரளும். மான்மதம் - கஸ்தூரிவர்க்கமும்.
படு - பொருந்தியுள்ள.
மைவரை வைப்பில். - மேகம் படியும் அந்த ஆனந்த கைலப்பிர
தேசத்தில்.
நம்மான் மதம்படு - நம்முடைய கிறிஸ்துவின்மார்க்கத் தமைந்துள்ள
மைவரை மாதவர் - குற்றமற்ற மெய்த்தொண்டர்.
மால் - மயக்கத்தையும்.
மதம் - அகங்காரத்தையும்.
படும் - விளைவிக்கிற.
ஐவரை - ஐம்பொறிகளாகிய பகைவரை.
வாட்டுவார் - கெடுப்பார்கள். எ - று. |
|
|
| 22. |
ஓது
இமக்குல நாள்மலர் ஓடையை - பொற்றாமரையென்று சொல்
லத்தக்க செந்தாமரைப் புஷப்ங்கள் அலர்ந்திருக்கின்ற கான்
யாற்றோடைகளை.
ஓதிமக்சூலம் ஓகையில் நாடுவ - அம்ஸப்பக்ஷிகள் குதுகலத்தோடு
நாடித் தங்கும்.
ஓதிமக்குகை ஓண்டவர் - மலை முழைஞ்சுகளிற் றங்கியிருந்து,
ஒள் ளிய தபஸைச்செய்யும் மெய்த்திருத்தொண்டார்கள். |