பக்கம் எண் :

528

லாத வசையும், மாயமும் பொருந்தியிருக்கிற தன்மையினாலும்,
(3) கொள்வோருக்குப் பிரியமுண்டாக நயந்துபேசி வஞ்சிக்கிற
விதத்தினாலும், முத்தேவரை யொத்துளது எனக் கொள்க.
                                             _______________
   
                ஆநந்தசைலப் படலம்.
17. நனிமிகு தருமம் நாடு அகம் மிளிர்வன - அநேகமாக விதக்கப்பட்ட
   தருமங்கள் யாவும் திருநாட்டின்கண் விளங்குவன.
நனியருள் நாடுஅகம் மிளிர்வன - நாடுகின்ற திருத்தொண்டரகத்து
   அதிகமதிகமாகத் தேவகிருபை விளங்குவன.
நனிதொகுமயில்கள் பொழில்வாய் நாடகம் மிளிர்வன - சோலைப்
   புறங்களில் அநேகமாகக் கூடுகின்ற மயில்களின் நிருத்தனம்
   விளங்குவன.
நளிர் இளவனசம் நாள்தக மிளிர்வன - குளிர்ச்சியுள்ளபுதிய தாம
   ரைமலர் பிராதகாலந் தகவுபெற விளங்குவன. எ - று
18. கலைமாமதி வான் அரங்கு உதிக்கும் - பூரண கலையுள்ள சிறந்த
   சந்திரன் ஆகாய அரங்கத்தில் உதயமாகும்.
வானரம் தருமாச்சினை குதிக்கும் - குரங்கு விருக்ஷங்களின் பெரிய
   கொம்புகளில் தாவித்தாவிக் குதித்து விளையாடும்.
மலர்க்கடி வானர் அங்கம் மடுக்கும் - புட்பகந்தம் பாலோக
   யாத்திரிகர் அங்கத்தில் அளைந்து பரிமளிக்கும்.
மடஅனம் வான் அரங்கம் அடுக்கும் - இளமையான அன்னப்பக்ஷி
   கள் தூய்மையான ஆற்றிடைக் குறையான மணல் திடர்களை
   அடுத்து வசிக்கும். எ - று.
19.

மா தருக் குலம் மல்குமலை - மலையிலும் மலைசார்ந்த இடங்களிலும்
   ஜாதிஜாதியான பெரிய விருக்ஷங்கள் நிறைந்துநிற்கும்.
குடிமாதருக்குஉலவா மனைமாட்சிமை - நற்குண நற்செய்கையாகிய
   குடித்தனவொழுக்கம் அவ்வவ் கிராமங்களிலுள்ள குலமாத
   ரிடத்து ஒழியாது நிலைத்துநிற்கும்.
மாசறும் ஆடவர் - திரிகரண சுத்தரான புருடர்.
மா தருக்குஉலகுமாது வஞ்சமும் ஆதிய - பெரிய அகங்காரத்தை
   யும், உலக மயக்கத்தையும், பெண்ணாசையையும், பசாசுசக்கே
யுரிய கபடத்தையும், இவை முதலான துராசாரங்களை.
அருக்குவர் - தங்களிடத்து நெருங்கவொட்டாது தேய்த்துவிடுவர்.
   எ-று.

'வஞ்சமும்' என்றதின் 'உம்மை' ஏனையவற்றொடுங்கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது.