பக்கம் எண் :

527

82.

அந்நீள் கடைவீதி - அந்த நீண்ட மாயக்கடைவீதி.

படம் விரித்துப் பழிக்கஞ்சிடாது - பணாமகுடத்தை விரித்துப் பாத
கத்துக்கொல்காமல்.

பேருடல் கிடத்தி - பெரிய தன்னுடலை நீட்டிக் கிடத்தி.

உறுவன வாயிடுஉ - கிட்டிய எல்லாவற்றையும் விழுங்கி.

கொடுவிடம் பொதிந்து - பொல்லாத விஷத்தை மறைத்து வைத்து.

ஆருயிர்க் கொள்ளைகொள் நெடிய பாந்தள் - அருமையான
பிரா ணனைக் கொள்ளைகொள்ளும் நீண்ட பெரும்பாம்புபோலும்.எ -று.

கடை வீதிக்குப்படத்தைத் திரையென்றும், பேருடல் என்பதை இரண்டு சிறகுள்ள பெரிய தெருவென்றும், கொடுவிடமென்பதை நித்திய கேடு என்றுங்கொள்க.

 
83.

என்றிலங்கவிலங்கெழில்வாய் நெகூஉ - அருணோதயமான வுடனே விளங்குகின்ற அழகிய இதழ்களை யலர்த்தி.

மன்றலர்ந்து - பரிமளத்தைப் பரப்பி.

அளி மொய்த்து - வண்டுகளால் மொய்க்கப்பட்டு.

மதுச் சொரிந்து - தேனைச் சொரிந்து.

ஒன்றுளக் களிகாட்டலில் - பொருந்தியபடி மனசுக்கு மகிழ்ச்சி யைத் தருதலினாலே.

ஒண்மறுகு - துலக்கமுள்ள அந்த மாயக்கடைவீதி.

அன்றலர்த அருங்கடிமாலையே - புதிதான நல்ல வாசனையுள்ள
பூமாலை போலுமுள்ளது. எ - று.

கடைவீதிக்கு 'வாய்நெகூஉ' என்பதை கபாடந் திறவுண்டு எனவும்,
'அளிமொய்த்து' என்பதைப் பிரீதியினாலே ஜனங்கள் கூடப்
பெற்று எனவும், 'மதுச்சொரிந்து' என்பதைக் கள்ளைவார்த்து எனவும்,
'களி' என்பதை வெறி எனவுங் கொள்க.

 
84.

திசைழகம் திகழப் பொருள் செய்தலில் - நான்கு திசையிலும்
நான்குமுகந் திகழ வீற்றிருந்து எல்லாப் பொருள்களையும் படைக்
கின்ற தொழிலைச் செய்தலினாற், பிரமாவையும்.

வசையில் மாயை வாம்பறுபான்மையில் - வசை மொழிகளாலும்
அளவில்லாத கபடநாடகத்தினாலும், விஷ்ணுவையும்.

நசைபிறங்க மன்று ஆடி நடித்தலில் - விருப்பமுண்டாக அம்பலத்
தில் ஆடி நடிப்பதினால், சிவனையும்.

இசையும் அம்மறுகிந்து ழத்தேவரை - அந்த மாயக்கடைவீதி இந்
துக்கள் வணங்கும் பிரமாதி தேவர்களை யொத்துளது. எ - று.

(1) கடைவீதிக்குநான்கு திசைகளிலும் வியாபித்து இகழத்தக்க விதமாய்ப் பொருள்கூட்டு முயற்சி செய்தலினாலும், (2) அளவில்