பக்கம் எண் :

526

                     சிலேஷை, யமகம், திரிபு, மடக்கு முதலிய
        
                  சில கவிகளுக்கு அர்த்தம்.


 மாயாபுரிப் படலம்
 

46.

அம் கம் ஆம் மதவாரணந் தொனிபடுமல்லால் - அழகிய
கருமேகம் போன்ற, மதயானைகளின் பிளிற்றொலி செவிமடுப்பன
வேயன்றி,

அங்கம் மாமத ஆரணத் தொனிபடாது ஆக - மெய்மார்க்க
சாஸ்தி ரங்களினுடையவும் வேத பாராயண த்தினுடையவுந் தொனிகள்
யாண்டுங் கேட்கப்படுவன அல்ல, அப்படியே,

எங்கும் இல் ஒழுக்கு இகந்தன என்பதை யல்லால் - எங்குமுள்ள
வீடுகள் தாம் ஒழுக்கற்றிருப்பன வென்பதேயல்லாமல்.

எங்கும் இல்லொழுக்குஇகந்தன இலை யென்பதிலை -
எவ்விடத்தும் இல்லற வொழுக்கமுறைமை யொழிந்தன
வில்லையென்று சொல்லப்படுவதில்லை. எ - று. ஒழிந்தன வென்பதே
துணிபு.

   
78.

ஆரணங்கு ஆட்டம் நாடி - பேய்மகனிரையொத்த விலைமாதர் நட்
டம் பயில்வதையே கருதிப்பார்த்து.

அகங்குழைந் திருப்பார் யாண்டும் - எப்பொழுது மனங்களித்திருப்
பார். (அல்லாமல்,)

ஆரணம் காட்ட நாடி - (தங்களுடைய மோசமான நிலைமையை)
மெய்வேதமெடுத்து விளக்கிக்காட்ட அவற்றை யாராய்ந்து.

அகங்குழைந் திருப்பாரில்லர் - மனந்திரும்பிக் கனிவுற்றிருப்பவர்
அவ்விடத்து யாருமில்லர்.

யாண்டும் தார் அணி தந்து அஞ்ஞானச் சனியனைப் பணிவார் -
எவ்விடத்தும் மலைகளைப்போட்டு அஞ்ஞானமுள்ள சனியனாகிய
விக்கிரகத்தை வணங்குவாரேயன்றி.

தாரணி தந்த ஞான தம்பிராற் பணிவாரில்லர் - உலகத்தையும்
எல்லாப் பொருள்களையுஞ் சிருஷத்துத் தந்த சர்வ ஞானமுள்ள
கடவுளை யாண்டும் வணங்குவோரில்லர். எ - று.