பக்கம் எண் :

525


4 நஞ்சமல்கிய வஞ்சவல்வினைநச்சிநச்சியென் னாளெலாங்
கிஞ்சித்தும்பய னின்றியோய்ந்தன கெஞ்சவந்துனைக் கிட்டினேன்
தஞ்சமுன்னிரு தஞ்சநாண்மலர்ச் சரணலாற்புக வரணிலேன்
அஞ்சலென்றெனை யாதரித்தரு ளகிலலோகசர் வேசனே.

 
5. பையுளேனுனைப் பற்றிலேன்பயன் பட்டிடேனொரு பாவியான்
கையதாகிய ஜீவபுஸ்தகக் கணக்கிலென்பெயர் காண்பதோ
துய்யவாவியை யருளியென்குண தோடம்யாவையு நீக்கியாள்
ஐயதாரகம் யாதுமின்றெனக் ககிலலோகசர் வேசனே.
 
6. ஓரணுத்துணை மதியிலாதுசிற் றின்பமுண்டுலைக் கமடமாய்க்
காரணத்தைவிட் டலகையோடுகை கோத்தெனாயுள்க ழிந்ததே
மாரணத்துறை நேரினித்திய மங்களக்கரை வாய்க்குமோ
ஆரணத்துறை காட்டியெற்கரு ளகிலலோகசர் வேசனே.
 
7. துன்புறழ்ந்துறழ்ந் தலசிவைகலுஞ் சுவைமணம்பெறு கிற்கிலாப்
பொன்பொலிந்தசொன் மாலைகொண்டுனைப் போற்றினும்பய
                                      [னென்னையாம்
என்புநெக்குரு கிக்கணீர்சொரிந் தேத்துமெய்விசு வாசமோ
டன்புறழ்ந்தசொற் பாலியென்கவிக் ககிலலோகசர் வேசனே.
 
8. பற்றெலாம்பிடு பட்டபோதினும் பாழ்த்தவென்னகப் பற்றினும்
முற்றுநீங்கல வாகிநின்றெனை முரணிவைகலு மோசஞ்செய்
புற்றராவொடு நாடகழிப்பது புண்ணியாதிரு வுள்ளமேல்
அற்றதாகுக வெற்புரந்தரு ளகிலலோகசர் வேசனே.
 
9. உண்டுபட்டவென் மடமையும்பல வீனமுந்திரு வுள்ளத்தே
கொண்டருட்கும ரேசன்புண்ணிய மொன்றையேகுறிக்
                                      கொன்டெனிற்
கண்டகாண்கிற காணுமென்பிழை யாவையுங்கணக் கேற்றிடா
தண்டர்நாயக பொறுத்திரக்ஷைசெய் யகிலலோகசர் வேசனே.
 
10. திமிரநீங்குமுன் றேகநீங்கியென் ஜீவனம்மையிற் சேரினுங்
குமரநாயகன் றிருவடித்துணை கூட்டியுய்யருட் கொண்டலே
எமரொடுந்தடுத் தாண்டபோரு ளென்றும்வாழிய வாழிய
அமரர்நாயக வாழிவாழிய வகிலலோகசர் வேசனே.
 
                அந்திப்பலி முற்றிற்று
   
            இரக்ஷணிய யாத்திரிகம் முற்றிற்று.  
   
            இரக்ஷணிய யாத்திரிகம் கவி, 3622.  
   
        இடைக்கிடை சேர்ந்துள்ள தேவாரம் கவி, 144.