| 5. |
முத்துவத்தனி
யேகவஸ்துவு மோக்ஷமுந்தரு மார்த்தமும்
நித்யஜீவனும் ஜீவமார்க்கமு நெறிதிரிந்துசெல் பாவமும்
சித்தசஞ்சலப் படுகரும்முள தீர்க்கசத்திய முலகுளீர்
சத்தியந்தவ றாதரக்ஷண்ய சமயநிர்ணயந் தானிதே.
|
|
|
|
|
| 6. |
ஆதிநித்திய
மாத்துமாமற்ற வகிலம்யாவும நித்தியம்
பூதலத்திறந் தோருயிர்த்தெழுந் தெம்பிரானடுப் புரியுநாள்
நீதியாய்வரு பலனுநித்திய நீக்கமின்றுல கத்துளீர்
சாதுசங்கத்தைச் சார்மின்ரக்ஷண்ய சமயநிர்ணயந் தானிதே.
|
|
|
|
|
| 7. |
கனிதனீர்மையிற்
கிறிஸதுவின்றிருந் கடைக்கணுக்கிலக் காகிடில்
துனிதவிர்ந்திடும் பாவசங்கடந் தொலையுநுந்நடை சுகிர்தமாம்
புனிதநன்மனம் பொருந்துமன்புனம் பொங்கிமேலிடு முலகுளீர்
தனிதமாரருண் மல்கும்ரக்ஷண்ய சமயநிர்ணயந் தானிதே.
|
|
|
|
|
| 8. |
கிழக்கெழுஞ்சுடர்
போலச்சத்தியங் கிளரக்கண்டினுங் கேதமார்
பழக்கமானதீ வினையைவேரறப் படுத்துநன்னெறி பற்றிடீர்
வழக்குறைத்துவா ணாளைப்போக்குதன் மதிகொலோவுல
கத்துளீர்
சழக்கைவிட்டுளந் திரும்பும்ரக்ஷண்ய சமயநிர்ணயந் தானிதே.
|
|
|
|
|
| 9. |
சேயருந்தம
ருஞ்சிநேகருந் தேடுபல்பொருட் செல்வமுங்
காயநீத்துயிர் பிரியுங்காலொரு கடிகைபின்வரக் காண்டுமோ
நாயகன்கிறிஸ் தியேசுவேமறு மைக்குநற்றுணை யுலகுளீர்
தாயகம்பிறி தில்லைரக்ஷண்ய சமயநிர்ணயந் தானிதே.
|
|
|
|
|
| 10. |
நம்மைநோக்கிய
தண்டனைக்கொரு நடுவராய்நின்று தாங்கியுஞ்
செம்மையிற்றிறம் பாதுநித்திய ஜீவபுண்ணியந் திரட்டியும்
இம்மைக்கும் மறுமைக்குநன்மையுண் டாகவிங்குதித் துலகுளீர்
தம்மையுந்தந்த சாமிரக்ஷண்ய சமயநிர்ணயந் தானிதே.
|
|
|
|
|
|
உண்மை
வற்புறுத்தல் முற்றிற்று. |
|
|
|
|
|
II.
அந்திப்பலி. (பண், பழம் பஞ்சுரம்.) |
|
|
|
|
| 1. |
தேவதேவத்ரி
யேகதோத்திரம் ஜேசுநாயக தோத்திரம்
பாவகாரிசி ரஞ்சிதைத்தெழு பாதபங்கஜதோத்திரம்
ஜீவபாதையில் வழிநடத்திடுந் திவ்யவாத்தும தோத்திரம்
ஆவலோடுனக் கனந்ததோத்திர மகிலலோகசர் வேசனே.
|
|
|
|
|
| 2. |
அலகிலாவருள்
ஜோதியேபக லருணனாரொளி யத்தமித்
துலகெலாமிருட் படலமுடிய துனக்கந்திப்பலி யுதவுவான்
இலகுநின்கிரு பாசனத்தைவந் தெய்தினேனித யத்தொளி
அலரவைத்தெனக் காவிதந்தரு ளகிலலோகசர் வேசனே.
|
|
|
|
|
| 3. |
உடைப்பெரும்பொருள்
கல்விநட்புற வுரிமையாவுமிவ்
வுடலொடும்
இடைக்கணின்றிடு முதவுமோர்துணை யென்றுநீயடி யேற்கியான்
படைக்கநின்றழற் படுகருய்க்குமென் பாவமஞ்சியுன் பாதத்தே
அடைக்கலம்புகுந் தேன்கடைக்கணி யகிலலோகசர் வேசனே.
|
|