பக்கம் எண் :

சீறாப்புராணம்

1039


இரண்டாம் பாகம்
 

     (இ-ள்) அவ்விதம் தீரப் பெற்ற நெருப்புப் பொறியானது தவழா நிற்கும் விழிகளை யுடையவனான அவன் நீ முகம்ம தென்னும் வார்த்தையை உனது நாவினாற் சொல்லே லென்று என்னைப் பேசி அகம், முகம், கை காலாகிய இவைகளைப் பாராது அடித்துத் துன்பப்படுத்திப் பூமியின் கண் விழச் செய்து சத்துராதிகளும் காதிற் கொள்ளாத நிந்தனையை யுடைய பல பேச்சுகளையுஞ் சொல்லிப் பொறுமை யின்றிப் பொருதி நின்றான்.

 

2810. தாக்குவன் வருவன் போவன் றடக்கைக ளிரண்டுங் கொட்டி

     மூக்கினிற் சேர்ப்பன் வெள்ளை முறுவலி னிதழைத் துண்ட

     மாக்கிடக் கறிப்ப னின்ற னாவியைக் கசக்கி வீணிற்

     போக்குவ னென்னச் சீறிப் புழுங்குவ னழுங்கு வானே.

43

     (இ-ள்) அன்றியும், என்னை அடிப்பான், சமீபத்தில் வருவான், தூரத்திற் போவான். பெருமை பொருந்திய இரண்டு கைகளையுங் கொட்டி மூக்கிற் பொருத்துவான். வெண் ணிறத்தையுடைய பற்களினால் அதரங்களைத் துண்ட மாக்கும் வண்ணம் கடிப்பான். உனது பிராணனை வருந்தச் செய்து வீணில் போக்கி விடுவேனென்று கோபித்துப் புழுக்க முறுவான். ஆரவாரிப்பான்.

 

2811. உறுக்குவ னசாவை நீட்டி யோங்குவ னுடலை யின்னே

     நொறுக்குவன் காண்டி யென்ன நொடியினிற் பலகான் மீசை

     முறுக்குவ னங்கை வாளான் மோதுவ னென்றே யாடை

     யிறுக்குவன் கடுப்பன் கோபித் தெழுவன்மற் றிருப்பன் மன்னோ.

44

      (இ-ள்) அன்றியும், என்னைப் பயமுறுத்துவான். தனது கையிலுள்ள அசாவாசகிய ஊன்று கோலை நீட்டி அடிக்கும்படி ஓங்குவான். உனது சரீரத்தை இப்பொழுதே நொறுக்கி விடுவேன், பார்ப்பாயாக வென்று ஓர் வினாடி நேரத்தில் பல தடவை தனது மீசையை முறுக்குவான். அழகிய கையினிடத்துள்ள வாளாயுதத்தினால் மோதி வெட்டுவே னென்று தனது வத்திரங்களை வலித்துக் கட்டுவான். விருவிருப்பான். கோபித்து எழும்புவான். பூமியின் கண் இருப்பான்.

 

2812. அருந்தவ மியற்றிப் பெற்றென் னகத்தினு ளிருத்தி மேனி

     வருந்திடா வண்ணம் போற்றி வளர்த்தனன் றாதை மாற்றம்

     பொருந்திடா தழித்து மாய முகம்மதைப் புகழ்ந்தோன் பாரி

     லிருந்தென்கொ லிறந்தா லென்கொ லென்றெனை யிகழ்ந்து சொன்னான்.

45

      (இ-ள்) அன்றியும், யான் அருமையான தவத்தைச் செய்து ஈன்று எனது வீட்டின் கண்ணிருக்கச் செய்து சரீர மானது துன்பப்