|
இரண்டாம் பாகம்
படாத விதத்தில் பேணி வளர்த்தேன்.
தந்தையாகிய எனது வார்த்தைகளைச் சம்மதியாது கெடுத்து வஞ்சகத்தை யுடைய அந்த முகம்ம தென்பவனைத்
துதித்தவ னாகிய இவன் இவ்வுலகத்தின் கண் இருந்தென்னை? இறந்தா லென்னை? ஒன்று மில்லை யென்று
என்னை நிந்தித்துக் கூறினான்.
2813.
ஒடித்தவன் மாறு கைகொண் டுதிரங்க ளொழுக வீசி
யடித்ததற் கடியேன் மேனி யசைந்தில கொடுஞ்சொற் கூறிக்
கடுத்ததற் கொல்கி நெஞ்சங் கலங்கில கருத்து ளாரப்
படித்தது கலிமா நாவிற் பகர்ந்ததுந் நாம மையா.
46
(இ-ள்) எனது
குருவாகிய நபிகட் பெருமானே! அவன் விரல்களை முறித்து மாறு கை கொண்டு இரத்தங்கள் சிந்தும் வண்ணம்
என்னை மோதி அடித்ததற்குத் தொண்டனாகிய எனது சரீரமானது அசையவில்லை. கொடிய வார்த்தைகளைச்
சொல்லிக் கோபித்ததற்குக் குழைந்து மனமானது பயப்படவில்லை. எனது சிந்தையின் கண் யான்
பொருந்தும்படி கற்றது, உங்களது ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர்ற சூலுல்லாஹிழு யென்னுங் கலிமாவாகும்,
யான் நாவினாற் கூறியது, நபி முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மென்னும் உங்களது திரு நாமமாகும்.
2814.
பொற்புட னுமது நாமம் புகல்வதே யெற்கு வேலைப்
பற்பக றாதைக் கென்னை பங்கமே படுத்த வேலை
யற்பக லீன்றாள் கண்ணி னருவிநீர் சொரிய வேலை
யிற்புறத் திருந்தோ ரியாரு மிரங்கவே வேலை யெந்தாய்.
47
(இ-ள்) அன்றியும்,
எனது பிதாவாகிய நபிகட் பெருமானே! எனக்கு அழகோடும் உங்களுது திரு நாமத்தைக் கூறுவதே தொழிலாகும்.
எனது தந்தைக்குப் பல பகற்பொழுது என்னைப் பின்னப் படுத்துவதே தொழிலாகும். எனது தாய்க்கு
இரவும் பகலும் விழிகளினது அருவியாகிய ஜலத்தைச் சிந்துவதே தொழிலாகும். எங்களது வீட்டின் கண்ணிருந்தவர்க
ளனைவருக்கும் அழுவதே தொழிலாகும்.
2815.
இனையன கண்டோர் கேட்டோ ரெந்தையை நோக்கி மக்கள்
குனிதரக் கண்ணாற் கையாற் கோபித்து விடுத லன்றித்
தினமிது தொழிலோ நல்லோர் செவிக்கிது தகுமோ நுந்த
மனவெகு ளியையு மாற்றித் தண்டனை மறுத்தி டென்றார்.
48
(இ-ள்) இப்படிப் பட்டவைகளைப்
பார்த்தவர்களும், கேள்வியுற்றவர்களும், எமது பிதாவைப் பார்த்துப் புதல்வர்கள்
|