பக்கம் எண் :

சீறாப்புராணம்

1041


இரண்டாம் பாகம்
 

பணியும் வண்ணம் விழிகளாலும் கைகளாலும் சினந்து விடுவதேயல்லாமல் பிரதி தினமும் இதுவா வேலை? நல்லோர்களின் காதுகளுக்கு இவ்வர்த்தமானந் தகுதியாகுமா? ஆகாது. ஆதலால் உங்களது இதயத்தினது கோத்தையும் ஒழித்து இவனுக்குச் செய்யும் ஆக்கினையையும் நீக்கி விடுங்களென்று சொன்னார்கள்.

 

2816. மரபினுக் குரியீர் நந்த மார்க்கநன் னெறியை மாறிக்

    குருமுகம் மதுவென் றீமான் கொண்டன னதனை யின்னே

     தெரிதரத் தவுபாச் செய்தாற் றீவினை மறுப்பே னல்லா

     லெரிதர விவன்ற னாவி யேற்றுவன் விசும்பி லென்றான்.

49

      (இ-ள்) அவர்கள் அவ்விதஞ் சொல்ல, எனது தந்தையானவன் எனது வம்மிசத்திற்குச் சொந்த மானவர்களே! நமது நன்மை பொருந்திய மார்க்கத்தினது ஒழுங்குகளைத் தவிர்த்து முகம்ம தென்பவனைக் குருவென்று இவன் உறுதி கொண்டான். அவ்வுறுதியை விட்டும் இப்பொழுதே நாமனைவரு முணரும் வண்ணம் தௌபாச் செய்தால் எனது தீய செயலை நீக்குவேன். அல்லையேல் இவனது பிராணனை ஆகாயத்தினிடத்து எரியும் வண்ணம் ஏற்றி விடுவே னென்று சொன்னான்.

 

2817. பண்டைநன் னெறியை மாறி நின்றபா விகளைச் செய்யாத்

     தண்டனை படுத்தல் யார்க்குந் தகைமையென் றிதயத் தெண்ணி

     விண்டவர்க் குரைகொ டாமன் மேலவ ரென்னைக் கூவிக்

     கண்டிதத் தொடுமன் போடுஞ் சிலமொழி கழற லுற்றார்.

50

      (இ-ள்) ஆதி காலத்தி லுள்ள நன்மை பொருந்திய மார்க்கத்தைத் தவிர்த்து நின்ற பாதகர்களைச் செய்யாத ஆக்கினைகள் செய்வது யாவருக்குந் தகுதியை யுடைய தாகுமென்று மனதிற் சிந்தித்து அவ்வாறு கூறிய அந்த எனது தந்தைக்குப் பதில் சொல்லாமல் மேன்மையை யுடையவர்களான அவர்கள் என்னை அழைத்துக் கண்டிப்புடனும் அன்புடனும் சில வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

 

2818. தந்தைமுன் னவர்கள் கொண்ட நெறிமுறை தவிர வேதம்

     வந்ததென் றொருவன் மக்கா புரத்தினின் மாற தாக

     நிந்தனை பெற்றா னன்னோன் பெயரினை நினைவிற் கொண்டாய்

     புந்திய தன்று நுந்தங் குலத்துக்கும் புகழ தன்றே.

51

      (இ-ள்) திரு மக்கமா நகரத்தின் கண் வேறு பாடாக ஒருவன் தனது பிதாவும் பிதாவின் முன்னோர்களும் கைக் கொண்ட மார்க்கத்தி னொழுங்குகள் தவிரும்படி தனக்கு ஓர் வேதமானது வந்ததென்று சொல்லி இழிவை யடைந்தான். நீ உனது கருத்தினிடத்து அவனது நாமத்தைக் கொண்டனை. அவ்விதங்