பக்கம் எண் :

சீறாப்புராணம்

1054


இரண்டாம் பாகம்
 

காசு பத்தென்று பொருந்திய வளவில், அவ்விடத்தில் அக் காசை வெற்றியைக் கொண்ட அவ் வபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்கள் அன்போடும் எடுத்து அன்னவர்களின் கைகளிற் கொடுக்க, அவர்களும் அந்தப் பூமியைக் கிரய மாகக் கொடுத்தார்கள்.

 

2854. தங்கமோ ரீரைந் தளித்தபூ பக்கர்

          வாங்கிய தலத்தினை யினிதின்

     கொங்கிருந் துலவு முகம்மது நபிக்குக்

          கொடுத்தன ரந்நிலத் திடத்தின்

     மங்குறோய்ந் திலங்கும் பள்ளியு மனையும்

          வகுத்தெடுத் தியற்றிட வருளிச்

     சிங்கவே றனைய அபூஅய்யூப் மனைவி

          னிருந்தனர் குருநெறிச் செம்மல்.

3

      (இ-ள்) அபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு அவர்கள் அவ்வாறு ஒப்பற்ற பத்துப் பொற் காசுகளைக் கொடுத்து வாங்கிய அந்தப் பூமியைக் கத்தூரி வாசனையான தமர்ந் துலாவா நிற்கும் நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு இனிமை யோடுங் கொடுத்தார்கள். மேன்மை பொருந்திய சன்மார்க்கத்தை யுடைய எப்பொருட்கு மிறைவரான அந்நபிகட் பெருமானவர்கள் அப் பூமியின் கண் மேகங்களானவை யுறைந்து பிரகாசிக்கும் ஓர் பள்ளியும் ஒரு மாளிகையும் பிரித் தெடுத்துக் கட்டும் வண்ணம் கற்பித்து ஆண் சிங்கத்தை நிகர்த்து அபூ அய்யூ பென்பவரின் வீட்டினிடத்து வைகினார்கள்.

 

2855. செழுமறைக் குரிசி லிருக்குமந் நாளிற்

        றிறல்அபூ அய்யுபை விளித்துப்

     பழுதுறும் பசிதீ ருணவுள தெனிலிங்

         கருள்கெனப் பணித்திடப் பரிவி

     னெழுதரும் வடிவோ யிருவருக் குளதிவ்

         வுணவென வெடுத்தளித் திடலு

     மழையெனத் தருஞ்செங் கரத்தினில் வாங்கி

        வைத்தொரு மொழிபகர்ந் திடுவார்.

4

      (இ-ள்) செழிய வேதங்களின் நாயகரான நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வா றுறையு மத்தினத்தில், ஒரு தினம் வலிமையையுடைய அபூ அய்யூ பென்வரைக் கூப்பிட்டுக் குற்ற முற்ற பசியைத் தீர்க்குகின்ற போசன மானது நும் மிடத் திருக்குமே யானால் அதை இவ்விடத்தில் கொண்டு வந்து தருவீராக வென்று