இரண்டாம் பாகம்
கேட்க, அவர்கள் அன்போடும்
எழுதுதற் கருமையான வடிவத்தையுடைய நபிகட் பெருமானே! இவ் வன்ன மானது இரண்டு பேருக்குள்ள தென்று
எடுத்துக் கொடுத்த மாத்திரத்தில், அதை மேகத்தைப் போலும் அருளா நிற்கும் செந்நிறத்தை யுடைய
தங்களின் கைகளால் வாங்கி வைத்துக் கொண்டு ஓர் வார்த்தை சொல்லுவார்கள்.
2856.
இப்பெரும் பதியின் றலைவரிற் சிறந்த
வியன்மறை பெரியவர்த் தெரிந்து
முப்பது பெயரை யழைத்திவண் வருக
வெனமுக மலர்ந்தினி தேகி
யொப்பருந் திறனுந் தலைமையுஞ் சிறந்தோ
ருவரிவ ரவரென வோடிச்
செப்பருங் குணத்தா லழைத்துமுன் விடுத்தார்
செழுமறைக் கவிகையர் திருமுன்.
5
(இ-ள்) இந்தப்
பெருமையைக் கொண்ட திரு மதீனமா நகரத்தின் தலைமைத் தனத்தை யுடையார்களிலே சிறப்புற்ற இயல்பினைப்
பொருந்திய வேதங்களின் முதியோர்களில் முப்பது பேரைத் தெரிந்து இவ்விடத்திற் கூட்டிக் கொண்டு
வருவீராக வென்று கூற, அதைக் கேள்வியுற்ற அவர்கள் முகமானது மலர்தலுறப் பெற்று இனிமையோடுஞ் சென்று
ஒப்புச் சொல்லுதற் கருமையாகிய வலிமையும் தலைமையுஞ் சிறப்புற்றவர்கள் உவர், இவர், அவ ரென்று
அவர்கள் பால் விரைந்து சென்று சொல்லுதற்கரிய குணத்தோடும் அவர்களைக் கூப்பிட்டுக் கூட்டிக்
கொண்டு வந்து செழிய மேகக் குடையை யுடையவர்களான நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் தெய்வீகந் தங்கிய சந்நிதானத்தின் முன்னர் விட்டார்கள்.
2857.
மருமலர்ப் புயத்தா ரழைத்துமுன் விடுத்த
மன்னரை யுபசரித் திருத்தி
யிருவருக் கிருந்த வுணவினை யளித்தி
யாவரு மயின்றிடு மென்ன
வொருமொழி யன்புற் றியனபி யுரைப்ப
வொருவருக் கொருவருண் மகிழ்வுற்
றரியசெங் கரத்தாற் றிருவயி றார
வனைவரு மமுதுசெய் தனரால்.
6
(இ-ள்) இயல்பினை
யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள்
வாசனையைக் கொண்ட புஷ்பங்களினா
|