இரண்டாம் பாகம்
லான மாலையை யணிந்த தோள்களை
யுடையவராகிய அந்த அபூ அய்யூ பென்பவர் அவ்வாறு கூப்பிட்டுத் தங்களின் சந்நிதானத்திற் கொண்டு
வந்து விட்ட அரசர்களான அவர்களை மரியாதை பண்ணி இருக்கும்படி செய்து இரண்டு பேருக்கிருந்த அவ்
வன்னத்தைக் கொடுத்து நீங்க ளனைவரும் உண்ணுங்க ளென்று ஒப்பற்ற வார்த்தையை அன்புற்றுக் கூற,
அவர்கள் தங்களில் ஒருவருக்கொருவர் மன மகிழ்ச்சி யடைந்து யாவரும் அழகிய தங்களின் உதர
மானது நிறையும் வண்ணம் அருமையான செந்நிறத்தை யுடைய கைகளால் அவ் வமுதை யருந்தினார்கள்.
2858.
உண்டிரு வருக்கிவ் வமுதென விருந்தோ
மூரவர் முப்பது பெயருங்
கொண்டிட வமுதுங் குறைந்தில விவர்தங்
குறிப்பினை யெவர்வகுத் துரைப்பார்
கண்டிடாப் புதுமை புதுமையீ தென்ன
யாவரு மொருப்படக் கலிமா
விண்டன ரீமான் கொண்டசு காபி
மார்களாய் வீடுபெற் றனரால்.
7
(இ-ள்) அவ்வா றருந்தி
நாம் இவ் வன்னத்தை யிருவருக்குப் போதிய தென்றிருந்தோம். இந்தத் திரு மதீனமா நகரத்தார்களான
நாம் முப்பது பெயருமுட் கொள்ள அந்த அன்னமுங் குறைந்திலது. ஆதலால் இந் நபிகட் பெருமானவர்களின்
மதிப்பைப் பிரித்துக் கூறுவார் யாவர்? ஒருவரு மில்லர். இஃது நாம் ஒரு காலத்திலும் பாராத ஆச்சரியம்!
ஆச்சரியம்!! என்று சொல்லி யாவர்களும் ஒரு மனப்பட ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர்ற
சூலுல்லாஹிழு என்னுங் கலிமாவை ஓதி ஈமான் கொண்டு அசுஹாபிமார்களாய் மோட்சவீட்டைப் பெற்றார்கள்.
2859.
முன்னரி னமுது குறைந்தில வளர்ந்த
முப்பது பெயரினுக் கிரட்டி
மன்னரை யினங்கொண் டிவண்வரு கென்ன
வழங்கலு மன்னவ ரெழுந்து
சொன்னவப் படியே யழைத்துமுன் விடுத்தார்
தோன்றுலு மகிழ்வுட னிருத்தி
யன்னவர்க் களித்த வதிசயஞ் சிறப்ப
வன்புட னினிதெடுத் தளித்தார்.
8
(இ-ள்) அன்றியும்,
ஆதியி லுள்ள இனிமையை யுடைய அவ்வன்ன மானது குறைந்திலது, ஓங்கிற்று. அரசரான நாயகம் நபிகட்
பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் முன்னழைத்த அந்த
முப்பது பெயருக்
|