இரண்டாம் பாகம்
கிரட்டி யரசர்களாகிய இவ்
வூரினரை இன்னங் கூட்டிக்கொண்டு இவ்விடத்தில் வருவீராக வென்று கூறிய மாத்திரத்தில், இராஜரான
அந்த அபூ அய்யூ பென்பவ ரெழும்பி அவர்கள் கூறிய அப் பிரகாரமே கூட்டிக் கொண்டு வந்து அவர்களின்
சந்நிதானத்தில் விட்டார்கள். அவர்களை அந் நாயக மவர்கள் சந்தோடத் தோடு மிருக்கச் செய்து
அம் முப்பது பெயருக்குங் கொடுத்த ஆச்சரியமானது சிறக்கும் வண்ணம் இனிமை யுடன் அவ் வன்னத்தை
எடுத்துக் கிருபையோடும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.
2860.
நீண்டசெங் கரத்தா லுவந்தெடுத் தருந்தி
நிறைந்தது வயிறென்பர் சிலர்கை
பூண்டது மதுரம் விடுத்தில வெனவுண்
டுதரங்கள் பொருமினர் சிலர்மேல்
வேண்டும்வேண் டாதென் றிருவிலாப் புறமும்
வீங்கிட வருந்தினர் சிலர்பாற்
கூண்டவ ரெவரும் பொசித்திட முனம்போ
லிருந்தது குறைந்தில வமுதம்.
9
(இ-ள்) அவ்விதங்
கொடுக்க, அவர்களில் சில ஜனங்கள் நீட்சியுற்ற செந் நிறத்தையுடைய கைகளினால் விரும்பி எடுத்துப்
புசித்து என துதரம் நிறைந்த தென்று சொன்னார்கள். சில ஜனங்கள் இனிமையானது கரத்திற்
பொருந்திற்று, விட்டில தென்று அருந்தி வயிறுகள் வீங்கப் பெற்றார்கள். சில ஜனங்கள் பின்னர்
வேண்டும், வேண்டாதென்று சொல்லி இரண்டு விலாப் புறமும் பருக்கும் வண்ணம் சாப்பிட்டார்கள்.
அவ்வாறு பக்கத்தில் கூடினவர்களியாவருமுண்ண ஆதியி லுள்ளதைப் போலவே அவ் வன்னம் இருந்தது. குறைந்திலது.
2861.
சிறியபாத் திரத்தி னிருந்தபோ னகநுந்
திருக்கையாற் றீண்டிடப் பெருகி
யறுபது பேரும் பொசித்தன மின்னு
மளவினிற் குறைந்தில புதுமை
பெறுவதிங் கினிமே லியாதுள வுமது
பெயர்க்கலி மாவலா லுலகி
லுறுபொரு ளிலையென் றனைவரு மீமான்
கொண்டன ருளத்துவ கையினால்.
10
(இ-ள்) அவ்வாறிருக்க,
அவர்களியாவரும் சிறிய ஓர் பாத்திரத்தினிடத்திருந்த அன்ன மானது உங்களது தெய்வீகந் தங்கிய
கையினால் தொட்டிட அதிகரித்து யாங்கள் அறுபது பெயரு மருந்தினோம். இன்னும் அஃது முன்ன ரிருந்த
கணக்கில் குறைந்திலது. இஃது ஆச்சரியம், யாங்கள் இனிமேல் இவ்
|