பக்கம் எண் :

சீறாப்புராணம்

1058


இரண்டாம் பாகம்
 

வுலகத்தின் கண் அடைவது யாதுளது? ஒன்றுமில்லை. உங்களது திரு நாமத்தை உடைய ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர்ற சூலுல்லாஹிழு யென்னுங் கலிமா வல்லாது இப் பூமியின் கண் மிக்க பொருள் இல்லையென்று இதயத்தினது உவப்பினால் ஈமான் கொண்டு இசுலா மாயினார்கள்.

 

2862. மறுத்தும்அவ் வபூஅய் யூபென வோது

          மன்னரை முகம்மது விளித்து

     நிறைத்தமூ ரலினுக் கினம்பதி புகுந்து

          நீண்மறு கிடந்தொறுங் குறுகிக்

     குறித்ததிற் றொண்ணூ றியன்மறை யவரைக்

          கூட்டியிங் குறைகெனக் கூற

     வெறுத்திடா தேகி யுரைத்தசொற் படியே

          வேந்தரைக் கொணர்ந்துமுன் விடுத்தார்.

11

(இ-ள்) பின்னரும், நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அந்த அபு அய்யூ பென்று கூறும் அரசரைக் கூப்பிட்டு நிறைந்த இவ் வன்னத்திற்காக இன்னம் இந்தத் திரு மதீனமா நகரத்தின் கண் போய் நீண்ட வீதிகளி னிடங்க ளெல்லாவற்றிலுஞ் சென்று முன்னர் மதிப்பிட்டதைப் போலும் இயல்பினை யுடைய தொண்ணூறு வேதியர்களைக் கூட்டிக் கொண்டு இவ்விடத்தில் வந்து சேருவீராக வென்று சொல்ல, அஃதை மறுக்காது சென்று அவர்கள் கூறிய அந்த வார்த்தைப் பிரகாரமே தொண்ணூறு அரசர்களைக் கூட்டிக் கொண்டு வந்து அவர்களின் சந்நிதானத்தில் விட்டார்கள்.

 

2863. வந்தமன் னவர்க ளனைவர்க்கு மினிய

          வாசகங் கொடுத்தரு கிருத்திச்

     சிந்தையிற் பொருந்தி யான்றரு மமுது

          செய்துவந் தேகுமி னென்னப்

     பந்தியிற் படுத்தி யமலையை யெடுத்துப்

          பதுமமென் கரத்தினாற் றிருந்தக்

     கொந்தலர் மரவத் தொடைப்புயக் குரிசி

          லீந்தனர் குறைவற வன்றே.

12

      (இ-ள்) கொத்துக்களைக் கொண்ட குங்குமப் புஷ்பத்தினாலான மாலையை யணிந்த தோள்களை யுடைய எப்பொருட்கு மிறைவ றாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு அங்கு வந்து சேர்ந்த அரசர்களான அவர்களியாவருக்கும் இனிமையை யுடைய வார்த்தைகளைச் சொல்லிப் பக்கத்திலிருக்கும் வண்ணஞ் செய்து