பக்கம் எண் :

சீறாப்புராணம்

1059


இரண்டாம் பாகம்
 

நீங்கள் மனத்தின் கண் பொருத்த முற்று யான் கொடுக்கும் அன்னத்தை விரும்பி யருந்திச் செல்லுங்க ளென்று அவர்ளை வரிசையா யிருக்கும்படி செய்து தாமரை மலரை நிகர்த்த மெல்லிய தங்களின் கைகளினால் குற்றமின்றி அவ்வன்னத்தை எடுத்துச் செவ்வையாகக் கொடுத்தார்கள்.

 

2864. ஈய்ந்தன ரெவரும் பொசித்தன ரமுது

          மிருந்தது குறைந்தில வதனா

     லாய்ந்தகேள் வியர்கள் காட்சிற் பெரிய

          வதிசய மெனச்சிர மசைத்து

     வாய்ந்தபே ரொளியு மான்மத நறையு

          மாறிலா திருந்துமண் ணகத்திற்

     றோய்ந்திலாப் பதத்திற் கரங்களிற் பலகாற்

          றொட்டுமுத் தமிட்டுவந் தனரால்.

13

      (இ-ள்) அவ்வாறு கொடுக்க, அங்கு வந்த அவர்களியாவரும் அதை யருந்தினார்கள். அந்த அன்னமும் முன் போலவே யிருந்தது. குறைந்திலது. அதனால் தெளிந்த கல்வியை யுடையவர்களான அவர்கள் இஃது புதுமையிற் பெரிய புதுமை யென்று தங்களின் தலைகளை யாட்டிச் சிறந்த பெரிய பிரகாசமும் கஸ்தூரி வாசனையும் நீங்கா துறையப் பெற்றுப் பூமியினிடத்துத் தோயாத அந் நபிகட் பெருமானவர்களின் சரணங்களில் தங்களின் கைகளாற் பல தடவை விரும்பித் தொட்டு முத்த மிட்டார்கள்.

 

2865. பதமல ரதனிற் கண்மலர் பரப்பிக்

          களிப்பொடும் பற்பல்காற் போற்றி

     யிதமுறுங் கலிமா வெடுத்தினி தோதி

          யிதயத்தி னிடுந்திர வியம்போற்

     புதியதோ ரீமா னெனுநிலை நிறுத்திப்

          பொருவிலாக் குறான்வழி பொருந்தி

     யதிசயம் பிறப்ப முகம்மது தமக்கன்

          சாரிக ளெனும்பெய ரானார்.

14

      (இ-ள்) அன்றியும், அவர்களின் பாதமாகிய தாமரைப் புஷ்பத்தின் கண் தங்களின் விழிகளான தாமரைப் புஷ்பத்தைப் பரத்திச் சந்தோஷத் தோடும் பற்பல தடவை புகழ்ந்து இன்பத்தைப் பொருந்திய ழுலாயிலாஹ இல்லலாகு முஹம்மதுர்ற சூலுல்லாஹிழு யென்னுங் கலிமாவை இனிமையுட னெடுத்துக் கூறித் தங்களின் மனதினிடத்து வைத்த திரவியத்தைப் போலும் நூதனமான ஒப்பற்ற ஈமானென்று சொல்லும் நிலைபரத்தை நிற்கச் செய்து நிகரிலாத புறுக்கானுல் கரீ மென்னும் வேதத்தினது தீனுல் இஸ்லா மாகிய மார்க்கத்திற் பொருத்த முற்று ஆச்சரிய முண்டாகும்