பக்கம் எண் :

சீறாப்புராணம்

1060


இரண்டாம் பாகம்
 

வண்ணம் நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு அன்சாரிகளென்று கூறும் அபிதானத்தை யுடையவர்க ளானார்கள்.

 

2866. ஒருபெரும் பகலிற் பெரியகா ரணமா

          யுலகெலா மறிந்திட மனைக்க

     ணிருவருக் கிருந்த வமுதினா லொருநூற்

          றெண்பது பெயர்க்கினி தருத்தி

     யருமறைக் குரிய நல்வழி யினரென்

          றறைதரத் தீனிலை யமைத்துப்

     பரிவுபெற் றிருந்தா ரவர்திரு மனையிற்

          பார்த்திவ ரெனுமிற சூலே.

15

      (இ-ள்) அரச ரென்று கூறா நிற்கும் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா அஹ்மது முஜ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் ஒப்பற்ற பெரிய ஓர் பகற் போழ்தில் பெருமையைக் கொண்ட காரணமாக எல்லா வுலகங்களும் அறியும் வண்ணம் வீட்டினிடத்திரண்டு பேருக் கிருந்த அன்னத்தினால் நிகரிலாத நூற்றி யெண்பது பெயர்களை இனிமையுட னுண்ணச் செய்து அரிதாகிய புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்திற்குச் சொந்தமான நன்மை பொருந்திய சன்மார்க்க ரென்று யாவரும் கூறும்படி தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்தினது நிலை பரத்தை யமையப் பண்ணி அந்த அபூ அய்யூ பென்வரின் வீட்டின் கண் கிருபையைப் பொருந்தி யிருந்தார்கள்.