பக்கம் எண் :

சீறாப்புராணம்

1061


இரண்டாம் பாகம்
 

உகுபான் படலம்

 

எழுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்

 

2867. மலிபெரும் புகழான் அபூஅய்யூப் மனையின்

          மனமகிழ்ந் திருக்குமந் நாளி

     னிலைபெறு மனையும் பள்ளியும் வனைந்த

          தெனுமொழி தொழிலவர் நிகழ்த்த

     விலையுறும் பெயரிற் சைதையும் அபாறா

          பிகையுநண் புடன்விரைந் தழைத்தே

     யலகில்வண் புகழ்சேர் மக்கமா நகருக்

          கனுப்பினர் முகம்மது நபியே.

1

      (இ-ள்) நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா அஹ்மது முஜ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் மலிந்த பெரிய கீர்த்தியை யுடையவரான அபூ அய்யூ பென்பவரினது வீட்டின் கண் இதயமானது சந்தோஷமடையப் பெற்றுறையும் அந்தத் தினத்தில், வேலையாளர்கள் திரத்தைக் கொண்ட மாளிகையும் பள்ளியும் கட்டி முடிந்த தென்ற வார்த்தையைக் கூற, தங்களுக்குக் கிரயமாகக் கிடைக்கப் பெற்ற சைதென்பவனையும், அபாறாபிகு என்பவனையும், நட்போடும் விரைவில் கூப்பிட்டுக் கணக்கற்ற வளமையினது புகழைப் பொருந்திய திரு மக்கமா நகரத்திற் கனுப்பினார்கள்.

 

2868. மக்கமா நகர்விட் டுடன்வரும் பேரின்

          மனையுட னடைந்தவ ரல்லா

     ரொக்கலின் மனைவி யுடன்வராப் பெயர்க

          ளுயர்தரும் பள்ளியி னடுப்பப்

     பக்கலி னிரைத்துப் பந்தர்கள் வனைந்திங்

          கிருமின்க ளெனநபி பகர

     மிக்கவ ரெவரு மவ்வண முறைந்து

          sமேலவன் றனைத்தொழு திருந்தார்.

2

      (இ-ள்) அன்றியும், நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் திரு மக்கமா நகரத்தை விடுத்துத் தங்களின் கூட வந்த ஜனங்களில் மனைவி மார்களோடு வந்தவர்க ளல்லாதவர்களான உறவினது மனைவிமார்களோடு வந்தவர்க ளல்லாதவர்களான உறவினது மனைவிமார்களோடு வராதவர்களை மேன்மையைத் தரா நிற்கும் பள்ளியினது சமீபமாயுள்ள இடத்தில் வரிசையாகப் பந்தர்களைப் போட்டு இவ்விடத்தில் தங்கியிருங்க ளென்று கட்டளையிட,