பக்கம் எண் :

சீறாப்புராணம்

1101


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) மானின் கூட்டங்களானவை அவ்வாறு எல்லாத் திசைகளிலுஞ் சிதறுத லடைந்து மதி மயங்கிச் செல்ல, ஓர் பெண் மானானது தனக்குச் சமீபித்த தென்று அதைப் பார்த்து இரத்தினப் பிரகாசமெனச் சொல்லா நிற்கும் தனது நகங்கள் பூமியை வவ்வும்படி அதைக் கண்டித்து அருந்தும் மயக்கத்தினால் பின்பற்றிச் சென்றது.

 

2969. வடித்தநீர் தூங்குநாச் சுணங்கன் வாயினிற்

     பிடித்தெனத் தொடர்ந்தது பெயரப் புள்ளிமா

     னடித்தபந் தெனக்குதித் தரிதிற் சென்றபூ

     நடித்திடுங் ககுபத்துல் லாவை நாடியே.

5  

      (இ-ள்) அன்றியும், தெளிந்த ஜலத்தைச் சிந்துகின்ற நாவையுடைய அந்த ஓநாயானது தனது வாயாற் பற்றிற் றென்று சொல்லும் வண்ணம் அம் மானைப் பின் பற்றிப் போக, அந்தப் புள்ளி மானும் அடித்த பந்தைப் போலும் சாடி அருமை யோடும் இவ்வுலகத்தில் வெளிப்பட கஃபத் துல்லா வென்னும் பள்ளியை விரும்பிச் சென்றது.

 

2970. பட்டியின் வாய்நுனி படரு மானின்வாற்

     றொட்டது காணெனத் தொடரு மெல்வையி

     னெட்டெனுந் திசைபுகழ்ந் தேத்துந் தீவினைத்

     தட்டறும் அறமெனுந் தலத்து ளாயதே.

6

      (இ-ள்) அவ்வாறு செல்ல, அந்த ஓநாயினது வாயின் முனையானது பரவி யோடுகின்ற அந்தப் புள்ளி மானின் வாலைத் தொட்ட தென்று சொல்லும் வண்ணம் பினப்பற்றிச் சென்ற சமயத்தில் அம்மானாது எட்டென்று கூறா நிற்கும் திக்குகளும் துதித்து வணங்கும் பாவத்தின் நிலைமையானது அறுகின்ற ஹறமென்று கூறுந் தானத்தின் கண் போய்ச் சேர்ந்தது.

 

2971. இறையவ னமரர்க ளியற்றுஞ் சங்கையா

     லறமெனுந் தலத்தின்மா னாய தீண்டினித்

     தெறுகொலை விளைத்திட றீது செய்நெறி

     முறையதன் றெனத்தனி முடுவ னின்றதே.

7

      (இ-ள்) அவ்விதம் போய்ச் சேர, ஒப்பற்ற அந்த ஓநாயானது இம்மான் இறைவனாகிய அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் தேவர்களான மலாயிக்கத்துமார்கள் செய்த வரிசையினால் ஹறமென்று கூறா நிற்கும் அந்தத் தானத்தின் கண் போய்ச் சேர்ந்தது. ஆதலால் நாம் இவ்விடத்தில் இனி அழிக்கின்ற கொலைத் தொழிலைச் செய்வது குற்றமாகும். அது நல்ல சன்மார்க்கத்தினது ஒழுங்கு மல்லவென்று அங்கு நின்றது.