பக்கம் எண் :

சீறாப்புராணம்

1190


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அன்றியும், அவர்கள் புறுக்கானுல் கரீ மென்னும் வேதத்தினது வசனமாகிய ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர்ற சூலுல்லாஹிழு யென்னுங் கலிமாவை எழுதப் பெற்ற வாயிலை யுடைய மாளிகையி னகத் துள்ள உள்ளறைக ளெல்லாவற்றையுந் திறந்து பலவிதப் பேதத்தைக் கொண்ட அழகிய பட்டு வத்திரங்களை வரிசை வரிசையாகக் கோடிக் கணக்கில் எடுத்து மதுவைப் பொருந்திய அரும்பாகிய பூ மொட்டுகள் இருக்கப் பெற்ற அழகிய பரிமளத்தை யுடைய புஷ்ப மாலைகளையும் வாய்க்கும் வண்ணம் நல்ல அழகிய கையினிடத்துக் கொண்டார்கள்.

 

3228. மூதிருள் கடியுங் காந்தி சிதுறத்துல் முன்த காவென்

     றோதிய தருவின் பாலி லுயரலி பெயரும் பாத்தி

     மாதிருப் பெயருங் கூறி வானவர் கரங்க ளாரச்

     சோதிநின் றெறியத் திட்டிச் சுற்றிநின் றெறிந்திட் டாரால்.

188

      (இ-ள்) அன்றியும், தேவர்களான மலாயிக்கத்துமார்கள் முற்றிய அந்தகாரத்தைக் கடியா நிற்கும் பிரகாசத்தைக் கொண்ட சிதுறத்துல் முந்தஹா வென்று கூறும் விருக்கத்தி னிடத்து உயர்ச்சியைப் பொருந்திய அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களின் அபிதானத்தையும், பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் தெய்வீகந் தங்கிய அபிதானத்தையும், சொல்லித் தங்களின் கைகளாற் பொருந்தும் வண்ணம் ஒளிவானது நின்று எரியும்படி திட்டியைச் சுற்றி நின்று எறிந்தார்கள்.

 

3229. புதுநாறும் பனிநீர் சந்தம் புழுகுமான் மதங்கற் பூர

     மதுவிரிந் தொழுகும் பொற்பூ வானவர் மகளி ரேந்திக்

     கதிர்மணிக் கதீசா வீன்ற கன்னியை யலியைப் போற்றி

     விதமுறத் திசைக டோறுஞ் சிதறினர் விளங்க வன்றே.

189

      (இ-ள்) அன்றியும், தேவ மகளிராகிய கூறுல் ஹீன்கள் புதிய வாசனையைக் கொண்ட பனி நீரையும், சந்தனக் குழம்பையும், புனுகையும், கத்தூரியையும், கற்பூரத்தையும், தேனானது விரிந்து சிந்தா நிற்கும் பொன் வடிவமான புஷ்பங்களையும், கைகளில் தாங்கிப் பிரகாசத்தைக் கொண்ட இரத்தின மாகிய கதீஜா றலி யல்லாகு அன்ஹா அவர்கள் பெற்ற கன்னியான காத்தூனே ஜன்னத் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களையும், அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களையும், வித முறத் துதித்து விளங்கும்படி திசைக ளெல்லாவற்றிலும் சிதறினார்கள்.