இரண்டாம் பாகம்
(இ-ள்) பறு லென்று
சொல்லும் நோன்பை அவ்வாறு நோற்று வருகையில் அம் மாதத்தின் பதினேழாந் தேதியாகிய
வெள்ளிக் கிழமையில் குற்றமறக் கொத்துபாத் தொழுத பிற்பாடு களங்க மற்ற தூதர்களில் பசுபசா
றலி யல்லாகு அன்கு என்று சொல்லும் வீரரானவர் ஒழுங்கைக் கொண்ட சன்மார்க்கத்திற் தவறாத
வள்ளலாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுல் குறைஷிய்யா, முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்களின் சந்நிதானத்தில் வந்து வணங்கி எழும்பி நின்றார்.
3355.
வியர்வுமெய்த் தொய்வும் பூண
விசித்தகச் சையுமா கத்தி
னயர்வொடும் விரைவின் வந்தா
யாதிதன் தீனை மாறுங்
கயவர்தஞ் செய்கை யாது கண்டனை
யென்ன மார்க்கத்
துயர்நபி முகம்ம தின்பா
லொதுங்கிவாய் புதைத்துச் சொல்வார்.
4
(இ-ள்) அவ்வாறு நின்ற
அவரைச் சரீரத்தில் வெயர்வும், இளைப்பும் பொருந்தும் வண்ணங் கட்டிய கச்சையோடும் தேகத்தினது
தளர்வோடும் வேகமாய் இங்கு வந்த பசுபசாவே! நீ யாவற்றிற்கும், முதன்மையான அல்லாகு சுபுகானகு
வத்த ஆலாவின் தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தை விட்டும் வேறுபட்ட கீழ்மக்க
ளாகிய காபிர்களின் செய்கை யாது கண்டாய்? என்று கேட்க, அவர் சன்மார்க்கத்தினது மேன்மையை
யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின்
பக்கத்தில் ஒதுங்கி வாய் பொத்திச் சொல்லுவார்.
3356.
மருக்கமழ் சோலை சூழு மக்கமா
நகரின் வாழ்வு
பெருக்கிநந் தீனை மாறு பேசிய
தலைவர்க் குற்ற
வுரக்கமு மணியுந்தேச வாணிபத்
துறுதி யான
சரக்குகள் சின்னாண் முன்னர்
சாமுக்குப் போய தன்றே.
5
(இ-ள்) வாசனை பரிமளிக்குஞ்
சோலைகள் சூழ்ந்த திரு மக்கமா நகரத்தில் தங்களின் வாழ்வைப் பெருகச் செய்து நமது தீனுல்
இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கத்திற்கு விரோதங் கூறிய தலைவர்களான காபிர்களுக் குற்ற வசத்தி
லிருப்புள்ள முதல்களும் இரத்தினங்களு மாகிய தேச வர்த்தகங்களுக் குறுதி யான சரக்குகள் சில தினங்களுக்கு
முன்னர் ஷா மிராச்சியத்திற்குச் சென்றன.
3357.
அந்நக ரடைந்தி லாப மிரட்டிக்கு
மதிக மாறிப்
பின்னரிந் நாட்டுக் கேய பெறுஞ்சரக்
கனைத்துங் கொண்டு
மன்னிய புரவி யேறு வரிநெடுங்
கழுத்தலி யாவுந்
துன்னிடச் சுமைக ளேற்றித்
தொகுதிக டொகுதி யாக.
6
|