|
இரண்டாம் பாகம்
கொடுத்தவர்களும், எண்டிசைகளிலுஞ்
சென்று தவறினவர்களும், பொருந்திய அந்த யுத்தக் களத்தில் நின்றுந் தங்க ளூர்களில் போய்ச்
சேர்ந்தவர்களு மல்லாமல் ஒள்ளிய வில், வேல், பிரகாசத்தைக் கொண்ட வாளாகிய இவைகளை எறியும்படி
எதிர்த்த தலைமைத் தனத்தையுடைய அரசர்களில் எழுபது பெயரைக் களங்கமற்ற புறுக்கானுல் கரீமென்னும்
வேதத்தையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி
வசல்ல மவர்களுக்கு நேசமான அரசர்களாகிய சஹாபாக்கள் கோபித்துச் சிறையாகப் பிடித்தார்கள்.
3563.
அடிநிலந் தெரியா முகம்மதின்
பிதாபின்
னானஅப் பாசையு நிகரா
வடிவுறு மபித்தா லிபுதரு மலிமுன்
வந்தவுக் கயிலையுங்
கதியி
னடவுவாம் பரியா ரிதுதரு திருச்சேய்
நௌபலென் பவனையு முன்னர்
பிடிபடும் பெயரி னிவரையு நபிமுன்
பிடித்துவந் தனர்வய வேந்தர்.
212
(இ-ள்) பூமியிற் பாதங்கள்
தெரியாத நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல
மவர்களது தந்தையாகிய அப்துல்லா வென்பவருக்குத் தம்பியாகிய அப்பாசென்பவரையும், ஒன்றும் ஒப்பாகாத
வடிவத்தைப் பொருந்திய அபீத்தாலிபென்பவர் இவ்வுலகத்தின் கண் தந்த அலிறலியல்லாகு அன்கு
அவர்களுக்குத் தமையனாராக முன்னர் அவதரித்து வந்த உக்கயிலென்பவரையும் விரைவிற்
செலுத்துகின்ற பாயாநிற்குங் குதிரையையுடைய ஆரிதென்பவர் தந்த அழகிய புதல்வனான நௌபலென்பவனையும்
அவ்வாறு ஆதியிற் பிடிபட்ட பெயர்களில் இவர்களையும், வெற்றியைக் கொண்ட அரசர்களான அந்தச்
சஹாபாக்கள் சிறையாகப் பிடித்துக்கொண்டு நபி ஹபீபு றப்பில் ஆலமீன் சல்லல்லாகு அலைகி வசல்ல
மவர்களது சந்நிதானத்தில் வந்து சேர்ந்தார்கள்.
3564.
பிடித்தமன் னவரை முன்னுற
நடத்திப்
பெரும்படை யனைத்தையுந்
திரட்டி
முடித்தவெம் போரிற் காகள
முழக்கி
யுறைந்திடு பாசறை
முன்னி
யடித்துடைத் திறந்த தீனவர்
பதினான்
கமருறுந் தலைவர்க டமையு
மெடுத்தினி தடக்கித் தொழுதிருந்
தனர்மே
லிரவியு மறைந்தன னன்றே.
213
|